×

மாவட்டங்களில் கொரோனா பணிகளை கண்காணிக்க 37 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

சென்னை: கொரோனா நோய் தடுப்பு  நடவடிக்கைகளை பணிகளை கண்காணிக்க 37 மாவட்டங்களுக்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது. தமிழகத்தின் கொரோனாவின் 2வது அலையின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை பணிகளை கண்காணிக்க 37 மாவட்டங்களுக்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி ரமேஷ் சந்த் மீனா-அரியலூர் மாவட்டம், சி.சமயமூர்த்தி-செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி. என்.முருகானந்தம்-கோவை, சந்திரகாந் பி.காம்ளே-கடலூர், அதுல் ஆனந்த்-தர்மபுரி, மங்கத் ராம் சர்மா- திண்டுக்கல், கே.கோபால்- ஈரோடு, திருப்பூர். எல்.சுப்பிரமணியன்-காஞ்சிபுரம், பி.ஜோதி நிர்மலாசாமி-கன்னியாகுமரி, சி.விஜய ராஜ்குமார்-கரூர், டாக்டர் பீலா ராஜேஷ்-கிருஷ்ணகிரி, பி.சந்திரமோகன்-மதுரை, விருதுநகர்.

எம்.சாய்குமார்- நாகப்பட்டினம், மயிலாடுதுறை. தயானந்த் கட்டாரியா- நாமக்கல், சுப்ரியா சாகு- நீலகிரி, அனில் மிஸ்ராம்- பெரம்பலூர், சம்பு கலோலிகர்- புதுக்கோட்டை, தர்மேந்திர பிரதாப் யாதவ்- ராமநாதபுரம், ஜி.லட்சுமி பிரியா-ராணிப்பேட்டை, திருவண்ணாமலை. எம்.டி.நிசாமூதின்- சேலம், டி.கார்த்திகேயன்- சிவகங்கை, சுன்ஜூன்கம் ஜதக் சிரு-தென்காசி, மைதிலி கே.ராஜேந்திரன்- தஞ்சாவூர், ஏ.கார்த்திக்- தேனி, குமார் ஜெயந்த்-தூத்துக்குடி, ரீட்டா ஹரீஸ் தாகர்- திருச்சி, செல்வி அபூர்வா- திருநெல்வேலி, டி.எஸ்.ஜவஹர்- திருப்பத்தூர், எஸ்.ஸ்வர்ணா- வேலூர், கே.பாஸ்கரன்- திருவள்ளூர், கிர்லோஸ் குமார்- திருவாரூர் மாவட்டத்திலும் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Appointed 37 senior IAS officers to oversee corona operations in the districts
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...