×

கொரோனாவை காரணம் காட்டி தாமரைக்கு கதவை சாத்திய புல்லட்சாமி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘சிவன் பெயரை கொண்ட மாவட்டத்தில் ஊரடங்கை காற்றில் பறக்கவிட்டு மதுபான விற்பனையில் சுறுசுறுப்பாக இருக்கும் இலை கட்சியின் முக்கிய நபர் கலக்கி வர்றாங்களாமே, அப்டியா…’’ என்றார் பீட்டர் மாமா கேட்டார்.  ‘‘சிவன் பெயரை கொண்ட மாவட்டத்தில் ‘‘சிங்கத்தின்’’ பெயரில் துவங்கும் பகுதிகளில் மது விற்பனை களை கட்டி வருகிறதாம். காவல்துறை களமிறங்கி தடுத்தபோதும், இலைக்கட்சிக்காரரான மாவட்ட ‘உள்ளாட்சித் தலைமையில்’ இருப்பவர் பழைய அதிகார பலத்தோடு தன் ஆட்களை வைத்து பல்வேறு பகுதிகளிலும் மது விற்பனையை ஜரூராய் நடத்தி வருகிறாராம். இவர் ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு, திமுக ஆட்சியின்போது கொண்டு வந்த திட்டங்களை, இலைக்கட்சி ஆட்சியில் கொண்டு வந்ததாக பேசியதால், கடும் சர்ச்சையில் சிக்கியவராம். ஊரடங்கை காற்றில் பறக்கவிட்டார் இந்த இலை கட்சி நபர். இவரது மேற்பார்வையில் இரவு பகல் பாராது எந்நேரமும் ‘சரக்கு’ தாராளமாக புழங்குகிறதாம். இப்பகுதியானது திருச்சி, புதுக்கோட்டை மாவட்ட எல்லை என்பதால், பலதரப்பினரும் வெகு தூரத்திலிருந்தும் தேடி வந்து மது வாங்கிப் போகிறார்களாம். ஊரடங்கு அமலால் மதுக்கடைகள் பூட்டப்பட்டுள்ள நிலையில், இப்பகுதியில் உச்சத்தில் மது விற்பனை நடந்து கொண்டிருக்கிறது. கடையடைப்பால் ஒவ்வொரு மது பாட்டிலும் அளவிற்கேற்ப, அதிகபட்சமாக ₹300 வரை விலை உயர்த்தி விற்று லாபம் பார்க்கப்படுகிறது… ஆனால் காவல் துறை தான் மவுனித்துள்ளதாம்…’ என்றார் விக்கியானந்தா.‘‘பஞ்சாயத்து ஆபிசை கட்சி கலர் அடித்து இலை அலுவலகமாக மாற்றியதாக ெசால்றாங்களே, அது எந்த மாவட்டம் என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘இலைக்கட்சி ஆட்சியில் மாங்கனி மாவட்டத்தில் ரத்தத்தின் ரத்தங்கள் செய்த அலம்பல்கள் கொஞ்ச நஞ்சமில்லையாம். பஞ்சாயத்து தலைவர்களும், செயலாளர்களும் ஸ்டிராங்கா கூட்டணி போட்டு பல, தகிடு தத்தங்களை செஞ்சது மெல்ல மெல்ல அம்பலமாகிக்கிட்ேட இருக்காம். இது ஒரு புறமிருக்க, இலை கட்சி சார்ந்த பஞ்சாயத்து தலைவர்கள், ஆபீசுக்குள்ளேயே கட்சி கலரில் தங்களது பெயரை எழுதி வச்சிருக்காங்களாம். அதோடு கட்சி சின்னத்தையும் வரைஞ்சு வச்சிருக்காங்களாம். இதுவரைக்கும் மாற்றுக்கட்சிகாரங்க யாரும், இந்த ஆபீசுகளுக்குள் போகாமல் இருந்ததால் இந்த அலம்பல் அம்பலமாகமால் இருந்ததாம். ஆனால் கடந்த வாரத்தில் கொரோனா நிவாரண நிதிக்கான டோக்கன் வழங்குவதற்கு பஞ்சாயத்து ஆபீசுகளுக்கு சென்ற சூரிய கட்சியினர், இதை கண்டு அதிர்ந்து போனாங்களாம். ஆபீசுக்கு வெளியே தலைவரின் பெயரை எழுதி வைக்கலாம். ஆபீசுக்கு உள்ளே தலைவரின் பெயரை கட்சி கலரில் எழுதி, அதில் சின்னத்தையும் வரைந்து வைத்திருப்பது என்ன நியாயம்? என்று கேள்வி எழுப்பினாங்களாம். இதற்கு ஒரு சில, செயலாளர்கள் வருத்தம் தெரிவிச்சு, அதை அழிச்சாங்களாம். ஆனால் கிழக்கு பகுதியை சேர்ந்த பஞ்சாயத்து செயலாளர்கள், பலர் இதை கண்டும் காணாமல் விட்டுட்டாங்களாம். எதிர்கட்சி உறுப்பினர்கள் வரவில்லை என்பதற்காக ஊராட்சி அலுவலகத்தை இலை கட்சி அலுவலகமாக மாற்றுவது சரியா என்று கேள்வி கேட்கின்றனர் பொதுமக்கள்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘புல்லட்சாமியின் மயான அமைதியை பார்த்து புயலுக்கு முன் வரும் அமைதி ேபாலே இருக்கே… புதுச்சேரியில் அமைச்சரவையில் இடம் கிடைக்குமா… இல்லை… கழட்டிவிட்டுவிடுவார்கள் என்ற பெருத்த சந்தேகத்தில் தாமரை தலைகள் இருக்கிறார்களாமே, அப்டியா…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘புதுச்சேரியில்  புல்லட்சாமி முதல்வராக பொறுப்பேற்ற நேரத்தில், அவரையும் கொரோனா தாக்கியது.  இதனால் அவர் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 5  நாட்கள் சிகிச்சை முடித்துக்கொண்டு ஊர் திரும்பிய  புல்லட்சாமிக்கு  தொண்டர்கள் தேங்கய் உடைத்தும், பூசணிக்காய் சுற்றியும் திருஷ்டி கழித்தனர்.  அதே நேரத்தில் புதிய அமைச்சரவை குறித்து முடிவு செய்யாமல் தாமரைக்கு ஆட்டம்  காட்டுகிறாராம். துணை முதல்வர் பதவி கேட்டு வந்த தாமரை தரப்புக்கு, எவ்வித  பதிலையும் தெரிவிக்கவில்லை. இதனால அவர்கள் குழப்பத்தில் இருக்கிறார்களாம். அதைப்பற்றி கவலைப்படாமல், தன் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக கூறி தனது  வீட்டின் அறைக்கதவை சாத்திக்கொண்டார். அமைச்சர்கள் நியமனம், எம்எல்ஏக்கள்  பதவியேற்பு எதுவும் நடக்கவில்லை. கூடுதல் அமைச்சர், துணை முதல்வர் பதவி  கேட்ட தாமரை தரப்பினரும், புல்லட்சாமியின் அமைதி ஆயுதத்தால் வெறுத்துபோய்விட்டனர்.   இதற்கு மேல் அவரிடம் எதுவும் கேட்க வேண்டாம். என்ன? செய்யட்டும் என  நினைக்கிறாரோ, அதனை செய்யட்டும் என தாமரை எம்எல்ஏகளுக்கு மேலிடத்தில்  உத்தரவாம். இதனால் புல்லட்சாமியிடம் எதுவும் கேட்கவில்லையாம். அண்டை  மாநிலமான தமிழகத்தில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு பேரிடரில் பம்பரமாய்  சுழன்று பணியாற்றுகின்றனர். ஆனால் முதல்வர் பதவியேற்றதோடு புல்லட்சாமி  நின்றுவிட்டதால், மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசாங்கம் செயல்பாட்டுக்கு  வரவில்லை. முக்கியமான சுகாதாரத்துறைக்கு அமைச்சர் நியமிக்காததால், மக்கள்  என்ன நினைக்கிறார்கள் என்று கூட தெரிந்து கொள்ள முடியவில்லை. இன்னமும்  புதுச்சேரியில் குடியரசு தலைவர் ஆட்சிதன் அமலில் உள்ளதாக தேர்வு  செய்யப்பட்டவர்கள் குமுறுகின்றனர்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘எழும்பூரில் போட்டியிட்டு தோற்ற கட்சியின் தலைவர், கட்சியில் இருந்து நீக்கியவர்களை மீண்டும் வர வேண்டும் என்று கெஞ்சி வருகிறாராமே…’’ என்றார் பீட்டர் மாமா. தமிழகத்தில்  நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் எழும்பூர் தொகுதியில் வேட்பாளராக  போட்டியிட்டு தோற்றார் முழத்துக்கு ஆப்போசிட் பெயரை கொண்ட தலைவர். அவர் தன் தோல்விக்கு காரணமான  43 பேரை நீக்கிட்டார். அது குறித்து கொஞ்சமும் கவலைப்படாத அவர்கள் புதிய பெயரில் கட்சியை தொடங்கிட்டாராம். இதில் நெற்களஞ்சிய  மாவட்டத்தில் மாவட்ட, ஒன்றிய பொறுப்புகளை வகித்த வந்த ஏராளமானோர் முழம் கட்சியில் இருந்து விலகி, புதுக்கட்சியில் சேர்ந்துள்ளாராம். இவர்களுக்கு ஓய்வு பெற்ற  ஐஏஎஸ் அதிகாரிகள் டெல்லியில் உதவி செய்கிறார்களாம். இதனால் புதிய கட்சியின் பணிகள் தற்போது  சுறுசுறுப்புடன் நடந்து வருகிறதாம். இதை பார்த்து மிரண்டு போன முழம் பெயர்  கொண்ட தலைவர், மாவட்ட மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் மீண்டும் கட்சியில்  வந்து இணையுமாறு தூது விட்டு வருகிறாராம்.  ஆனால்… அதை யாரும் கண்டுக் கொள்ளவில்லையாம்…’’ என்றார் விக்கியானந்தா. …

The post கொரோனாவை காரணம் காட்டி தாமரைக்கு கதவை சாத்திய புல்லட்சாமி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Bullatsamy ,Shiva ,Leaf Party ,
× RELATED ரிஷபத்தால் தோன்றிய ரிஷபபுரீஸ்வரர்