ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற தகுதிச் சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லுபடியாகும்: மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு

டெல்லி: ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற தகுதிச் சான்றிதழ் 7 ஆண்டுகளுக்கு பதிலாக ஆயுள் முழுவதும் செல்லுபடியாகும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த உத்தரவு 2011 முதல் ஆசிரியர் தேர்வு சான்றிதழ் பெற்றவர்களுக்கு பொருந்தும் எனவும் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. பள்ளிகளில் ஆசிரியராக நியமிக்கப்படுபவர்களுக்கு முன்தகுதி எனக்கூறப்படும் தேர்வாக ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது.

இந்தத் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்படும் தகுதி சான்றிதழ் ஏழு ஆண்டுகள் வரை செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த தகுதிச் சான்றிதழ் 7 ஆண்டுகளுக்கு பதிலாக ஆயுள் முழுவதும் செல்லுபடியாகும் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். இதன் மூலம் 2011ஆம் ஆண்டில் இருந்து ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும் தகுதி பெறுவர்.

7 ஆண்டுகளுக்குப் பிறகு தகுதி சான்றிதழ் பெறாதவர்களுக்கு ஆயுட்கால தகுதி சான்றிதழ் வழங்கும்படி மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், கற்பித்தல் துறையில் பணியாற்ற விரும்பும் நபர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>