×

சவூதி அரேபியாவில் இருந்து டெல்லிக்கு கடத்திவரப்பட்ட ரூ.3.19 கோடி மதிப்புள்ள 367 ஐபோன்கள் பறிமுதல்!: புலனாய்வு அதிகாரிகள் அதிரடி..!!

டெல்லி: சவூதி அரேபியா தலைநகர் யாத்தில் இருந்து கடத்தி கொண்டுவரப்பட்ட மூன்றேகால் கோடி ரூபாய் மதிப்புள்ள ஐபோன்கள் டெல்லியில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கார்கோ விமானம் மூலம் டெல்லி விமான நிலையத்திற்கு ஐபோன்கள் கடத்தி கொண்டுவரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகள், சிறப்பு புலனாய்வு நுண்ணறிவு பிரிவு போலீசார் மற்றும் ஏற்றுமதி ஆணையரக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் உஷாரான அதிகாரிகள் அனைத்து பார்சல்களையும் முழுமையாக சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக வீட்டு உபயோக பொருட்கள் என்று  எழுதப்பட்டிருந்த 8 கொரியர் பார்சல்களை பிரித்து பார்த்தபோது அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். 


அந்த பார்சல்களில் தலா 1 லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள 367 ஐபோன்கள் இருந்தது தெரியவந்தது. இவற்றின் தற்போதைய சந்தை மதிப்பு 3 கோடியே 19 லட்சம் ரூபாயாகும். இவைகள் சவுதி அரேபியாவின் தலைநகர் யாத்தில் இருந்து அனுப்பப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. கொரோனா ஊரடங்கு மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடுகளை பயன்படுத்தி இந்த கடத்தல் நடைபெற்றிருக்கலாம் என தெரிகிறது. இந்த செல்போன் கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்த விவரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோக பொருட்கள் என்ற போர்வையில் தங்கம் கடத்தப்பட்டிருப்பது அங்குள்ள அதிகாரிகளையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 



Tags : Saudi Arabia ,Delhi , Saudi Arabia, Delhi, 367 iPhones, intelligence officers
× RELATED சவூதி அரேபிய சிறையில் இருந்து...