×

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து வரும் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படும்!: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..விவசாயிகள் மகிழ்ச்சி..!!

சென்னை: குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து வரும் 12ம் தேதி நீர் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை வரும் 12ம் தேதி திறக்க வேண்டும் என்று  தமிழக அரசுக்கு நேற்றைய தினம் விவசாயிகள் கோரிக்கை விடுந்த்திருந்தனர். தஞ்சையில் ஆறுகள், குளங்கள், வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம் சிறப்பு கண்காணிப்பு அலுவலர் பிரதீப் யாதவ் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட விவசாயிகள், தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். 


வருகின்ற 12ம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இந்நிலையில், மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேட்டூர் அணை திறக்கப்படுவதன் மூலம் காவிரி டெல்டா மாவட்டங்களில் 5.21 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். அணையில் இருந்து திறக்கப்படும் நீர் கடைமடை வரை செல்லும் வகையில் கால்வாய்களை தூர்வார ரூ.65 கோடியில் பணி நடக்கிறது. 


கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.13 அடியாக உள்ளது. மேட்டூர் அணையில் தற்போது 61.43 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. அணை திறப்பின் மூலம் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, அரியலூர், பெரம்பலூர், கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்கள் பயன் பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 



Tags : Mattur Dam ,Minister ,BC ,Q. ,Stalin , Kuruvai Cultivation, Mettur Dam, Water, Chief Minister MK Stalin
× RELATED மேட்டூர் அணையில் இருந்து குடிநீர்...