பொறையார் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு தடுப்பூசி

தரங்கம்பாடி : பொறையார் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பணிபுரிவோர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.முகாமிற்கு பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் தலைமை வகித்தார். அரசு போக்குவரத்துக் கழக நாகை மண்டல பொதுமேலாளர் மாரியப்பன், நாகை கோட்ட மேலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளை மேலாளர் ஜெயக்குமார் வரவேற்றார். செம்பனார்கோவில் வட்டார ஆக்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் கார்த்திக்சந்திரகுமார் தலைமையில் மருத்துவ குழுவினர் 100 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினர்.

தரங்கம்பாடி பேரூராட்சி சார்பில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டு சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது

முகாமில் தரங்கம்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் ரஞ்சித், சுகாதார ஆய்வாளர்கள் ஜெயக்குமார், சுப்ரமணியன், திமுக நகர செயலாளர் வெற்றிவேல், ஒன்றிய செயலாளர் அப்துல்மாலிக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>