×

கொள்ளிடம் ஆற்றங்கரை சாலையில் 150ஆண்டு பழமையான மரம் தீயில் கருகியது

கொள்ளிடம் : மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் சோதனைச் சாவடியிலிருந்து மாதிரவேளூர் செல்லும் வழியில் சரஸ்வதிவிளாகம் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் வலது கரையில் 100 ஆண்டுகளை கடந்த மரங்கள் உள்ளன.இதில் 150 வருடங்கள் பழமையான தூங்கு மூஞ்சி மரத்திற்கு நேற்று சமூக விரோதிகளால் தீ வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தீ கொழுந்து விட்டு எரிந்ததால், தகவல் அறிந்த சீர்காழி தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.  இருந்தும் மரத்தில் இருந்த இரண்டு பெரிய கிளைகள் தீயினால் முறிந்தது.

பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் இந்த மரத்துக்கு தீ வைத்தவர்கள் யார் என்று பொதுப்பணித்துறை மற்றும் கொள்ளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு வருடத்துக்கு 2 அல்லது 3 மரங்கள் இப்படி தீ விபத்து ஏற்பட்டு பாதிக்கப்படுகின்றன என்று அப்பகுதியில் உள்ள மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.


Tags : Kollidam , Kollidam: Kollidam in Saraswathivilakam village on the way to Madiravelur from Kollidam check post in Mayiladuthurai district
× RELATED திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி பலி