×

சாராயம் காய்ச்சுதல், மரம் வெட்டுவதை தவிர்க்க ஏற்காடு வனப்பகுதியில் ‘ட்ரோன்’ மூலம் கண்காணிப்பு-வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

சேலம் : ஏற்காடு வனப்பகுதியில் சாராயம் காய்ச்சுதல், மரம் வெட்டுதலை தடுக்கும் வகையில் ட்ரோன் கேமரா மூலம் வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.  கொரோனா தொற்று பரவலை தடுக்க முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால்,  கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது அதிகரித்துள்ளது. சேலம் மாவட்டத்தை பொறுத்தளவில் ஏற்காடு, கல்வராயன் மலைப்பகுதியில் பல்வேறு இடங்களில் மர்மநபர்கள், சாராய ஊறல் போட்டு, காய்ச்சி கடத்தி வருவதாக கூறப்படுகிறது.

ஏற்காட்டிலும் பல இடங்களில் சாராய ஊறலை போலீசாரும், வனத்துறையினரும் அழித்துள்ளனர். இப்படி வனத்திற்குள் ரகசியமாக சாராயம் காய்ச்சுவதை கண்டறிய வனத்துறை அதிகாரிகள், ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனை கொண்டு, வனத்தில் சந்தனமரம், தேக்கு உள்ளிட்ட மரங்களை வெட்டி கடத்தும் செயலை தடுக்கவும்  கண்காணிக்கவும் முடிவு செய்துள்ளனர்.  இதன்படி ஏற்காடு மலை அடிவாரப்பகுதியில்இருந்து ஏற்காடு மலை மற்றும் அதன் சுற்றியுள்ள வனப்பகுதிகளில் ட்ரோன் கேமராவை பறக்கவிட்டு, கண்காணிக்கப்பட்டது.

இந்த ட்ரோன் கேமராவை, வனத்துறையினர் ஓரிடத்தில் இருந்து 5 முதல் 10 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு பறக்கவிட்டு கண்காணிக்கப்பில் ஈடுபட்டனர்.  தொடர்ந்து வானில் பறந்து, வீடியோக்களையும், போட்டோக்களையும் இந்த ட்ரோன் கேமரா எடுத்தது. இதன்மூலம் யாராவது காட்டிற்குள் பதுங்கி இருந்து கள்ளச்சாராயம் காய்சுதல், மரம் வெட்டுதல், விலங்குகளை வேட்டையாடுதல் உள்ளிட்ட சமூக விரோதச் செயலில் ஈடுபட்டிருப்பது தெரிந்தால், அவர்களை கண்டறிந்து பிடித்து விடலாம் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Yercaud forest , Salem: The forest department has been monitoring the Yercaud forest with a drone camera to prevent alcohol distillation and logging.
× RELATED புதுச்சேரியில் ஓடும்...