×

ஊட்டி-குன்னூர் சாலையில் மழை நீர் ஓடுவதால் பழுதடையும் அபாயம்

ஊட்டி : ஊட்டி-குன்னூர் சாலையில் மழை நீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையில் மழை நீர் மற்றும் கழிவு நீர் ஓடுவதால் சாலை பழுதடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. ஊட்டியில் நாள்தோறும் மழை பெய்து வருகிறது. பெரும்பாலான கால்வாய்கள் தூர் வாரப்படாமல் உள்ளது. ஊட்டியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் சேரிங்கிராஸ் முதல் நொண்டிமேடு பகுதி வரை சாலையோரத்தில் உள்ள மழை நீர் கால்வாய் தூர் வாரப்படாமல் உள்ளது. மேலும், மழை நீர் செல்ல வடிகால் அமைக்கப்படாமல் உள்ளது.

ஊட்டியில் தற்போது மழை பெய்து வரும் நிலையில், மழை நீர் வழிந்தோட வழியில்லாமல் சாலையில் ஓடுகிறது.  ஊட்டி - குன்னூர் சாலையில் ஆவின் அருகே சாலையில் மழை நீர் மற்றும் கழிவு நீர் கலந்து ஓடுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மட்டுமின்றி, சாலையும் பழுதடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, போர்க்கால அடிப்படையில் சாலையோரத்தில் மழை நீர் கால்வாய் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதேபோன்று ஊட்டியில் பல இடங்களில் சாலையோரங்களில் உள்ள மழை நீர் கால்வாய் தூர் வாரப்படாததால் இதேபோன்று சாலையில் தண்ணீர் ஓடுகிறது. எனவே, அனைத்து மழை நீர் கால்வாயை தூர் வாரி தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Tags : Ooty-Coonoor road , Ooty: The Ooty-Coonoor road has been blocked by a rainwater canal. Thus running rain water and waste water on the road
× RELATED ஊட்டி-குன்னூர் சாலையில் மழை நீர் ஓடுவதால் பழுதடையும் அபாயம்