×

சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை 2வது முறை மீறிய பாகிஸ்தான்: ஜேசிபி மீது துப்பாக்கி சூடு

ஜம்மு:  சர்வதேச எல்லையில்  சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்த ஜேசிபி இயந்திரத்தின் மீது பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையே எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தம் உள்ளது. இதன்படி, இருதரப்பு ராணுவமும் தாக்குதல் நடத்தக் கூடாது. ஆனால், பாகிஸ்தான் பல ஆண்டுகளாக இதை மீறி எல்லையில் ராணுவம் மீதும், பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடத்தி வந்தது. இருநாட்டு உறுவை மேம்படுத்தும் முயற்சியாக, இந்த சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாக பின்பற்றுவதாக கடந்த பிப்ரவரி 25ம் தேதி பாகிஸ்தான் ஒப்புக் கொண்டது. இதற்காக, இருநாட்டு ராணுவ அதிகாரிகள் இடையே ஒப்பந்தமும் கையெழுத்திட்டது.

எனினும், இந்த புதிய ஒப்பந்தத்தையும் மீறி  முதல் முறையாக கடந்த மே 2ம் தேதி பாகிஸ்தான் வீரர்கள் சம்பா  மாவட்டத்தில் ராம்கரில்  சர்வதேச எல்லைப் பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவம் 2வது முறையாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி நேற்றும்  தாக்குதல் நடத்தி உள்ளது. அர்னியா பகுதியில் சர்வதேச எல்லையொட்டிய பகுதியில் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் புதர்களை சுத்தம் செய்யும் பணியை இந்திய ராணுவம் செய்தது. அப்போது, காலை 8.15 மணியளவில் ஜேசிபி இயந்திரத்தின் மீது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.





Tags : Pakistan ,JCP , Pakistan violates ceasefire for the second time: JCP fired
× RELATED தேர்தல் ஆதாயத்திற்காக வெறுப்பாக பேசுவதா? பாகிஸ்தான் கண்டனம்