×

தமிழக அரசுக்கு முழு ஒத்துழைப்பு: தொழில் நிறுவன பிரதிநிதிகள் உறுதி: ஹுண்டாய் 5 கோடி, பிஎம்டபிள்யு 3 கோடி நிதி

சென்னை: தமிழக அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக தொழில் நிறுவன பிரதிநிதிகள் உறுதி அளித்துள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில், முன்னணி தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் தொழில் கூட்டமைப்புகளுடன் நடைபெற்ற கூட்டத்தில் கொரோனா நோய் தொற்றினை கட்டுப்படுத்திட பெருமளவில் பங்களிப்பு அளித்திட வேண்டுகோள் விடுத்தார். இந்த நிகழ்ச்சியின்போது, ஹுண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் 5 கோடி ரூபாய், பிஎம்டபிள்யு நிறுவனம் 3 கோடி ரூபாய், பண்ணாரி அம்மன் சுகர்ஸ் லிமிடெட் 1 கோடி ரூபாய்க்கான காசோலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக வழங்கினார். பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் உறுதி அளித்தனர். இந்த கூட்டத்தில், பல்வேறு தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், தொழில் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் நேரடியாகவும், வீடியோ கான்பரன்சிங் மூலமாகவும் கலந்து கொண்டனர்….

The post தமிழக அரசுக்கு முழு ஒத்துழைப்பு: தொழில் நிறுவன பிரதிநிதிகள் உறுதி: ஹுண்டாய் 5 கோடி, பிஎம்டபிள்யு 3 கோடி நிதி appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Hyundai ,BMW ,Chennai ,CM. G.K. Stalin ,Dinakaran ,
× RELATED அரசியல் சட்டப்படி அனைத்துக்...