தாக்குதல் நடத்திய நடிகர் கைது; அவரை நேசிக்கிறேன்... ஆனால் நான் ஒரு முட்டாள்! பாலிவுட் நடிகையின் கண்ணீர் பேட்டி

மும்பை: குடும்பத் தகராறில் தனது மனைவியான நடிகை மீது தாக்குதல் நடத்திய நடிகரை மும்பை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். பாலிவுட் நடிகை மற்றும் இந்தி தொலைக்காட்சி தொடர் நடிக்கும் நிஷா ராவலுக்கும், இந்தி தொலைக்காட்சி தொடர்கள், படங்களில் நடித்து வருபவருமான கரண் மெஹ்ராவுக்கும் கடந்த 2012ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவர்களுக்கு 4 வயதில் கவிஷ் மெஹ்ரா என்கிற மகன் இருக்கிறார். தம்பதிக்குள் குடும்ப பிரச்னை நீடித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு நிஷா ராவல் தன் கணவர் கரண் மெஹ்ரா மீது கோரேகாவ்ன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், கரண் மெஹ்ரா அடித்து தாக்கி துன்புறுத்தியதாக தெரிவித்திருந்தார்.

மேலும், தன்னுடைய முகத்தில் ஏற்பட்ட ரத்த காயங்கள் தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அதையடுத்து,  வழக்குப்பதிவு செய்த போலீசார் கரண் மெஹ்ராவை கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஐபிசி 336 மற்றும் 337 ஆகிய பிரிவுகளின்கீழ் கரண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே தம்பதிக்குள் பிரச்னை இருந்ததால், அவர்கள் விவாகரத்து கோரி குடும்ப நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருக்கிறார்கள் என்று போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து சமூக ஊடகங்களில் பேட்டி அளித்த நிஷா ராவல், ‘கரண் மெஹ்ரா என்னை பலமுறை தாக்கினார். அதன் காரணமாக என்னுடைய முகத்தில் காயங்கள் ஏற்பட்டன.

இவ்வளவு கொடுமைகளையும் பொறுத்துக் கொண்டு ஏன் அவரோடு வாழ்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். நான் கரண் மெஹ்ராவை நேசிக்கிறேன். இன்னும் அவரை நேசிக்கிறேன்… நான் ஒரு முட்டாள்... ஆனால் அவரிடம் இருந்து பிரிந்து செல்ல நான் தயாராக இல்லை. எனக்கு துரோகம் செய்த கரண் மெஹ்ரா, என் குழந்தைக்கு எப்படி சிறந்த தந்தையாக முடியும். அப்படியொரு தந்தை என் மகனுக்கு வேண்டாம்’ என்று கண்ணீருடன் பேட்டி அளித்துள்ளார்.

Related Stories:

>