பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்; நம்பர் 1 வீரர் ஜோகோவிச் 2வது சுற்றுக்கு தகுதி: வீனஸ் வில்லியம்ஸ் தோல்வி

பாரீஸ்: கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையரில் முதல் சுற்றில் இன்று அதிகாலை நடந்த போட்டியில் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், அமெரிக்காவின் சாண்ட்கிரெனுடன் மோதினார். இதில், 6-2,6-4,6-2 என ஜோகோவிச் எளிதாக வென்று 2வது சுற்றுக்குள் நுழைந்தார். 3ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால், 6-3,6-2,7-6 என ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி போபிரினை வீழ்த்தி 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார். தென்ஆப்ரிக்காவின் கோரி ஆண்டர்சன், தென்கொரியாவின் குவான் சூன்வூவிடம் தோல்வி அடைந்து வெளியேறினார்.

மகளிர் ஒற்றையரில், அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன் 3-6,7-6,6-4 என ஸ்பெயினின் கார்லாநவரோவையும், செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா, 7-5,6-4 என குரோஷியாவின் டோனா வெக்கிக்கை வீழ்த்தி 2வது சுற்றுக்குள் நுழைந்தனர். அமெரிக்காவின் கோகோ காஃப், செக்குடியரசின் கரோலினா முச்சோவா , 5ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் எலினா ஸ்விடோலினா உள்ளிட்டோரும் 2வது சுற்றுக்கு தகுதி பெற்றனர். அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 3-6,1-6 என ரஷியாவின் எகடெரினா அலெக்ஸ்சாண்ட்ரோவாவிடம் தோல்வி அடைந்து வெளியேறினார். இன்று 2வது சுற்று போட்டிகள் நடக்கிறது.

பெட்ரா கிவிடோவா விலகல்

11ம் நிலை வீராங்கனையான செக்குடியரசின் பெட்ரா கிவிடோவா முதல் சுற்றில் பெல்ஜியம் வீராங்கனையை வீழ்த்திய நிலையில், 2வது சுற்றில் ரஷ்யாவின் எலெனா வெஸ்னினாவுடன் இன்று மோத இருந்தார். இந்நிலையில் கணுக்காலில் காயம் காரணமாக தொடரில் இருந்து கிவிடோவா விலகி உள்ளார். இதனால் எலெனா 2வதுசுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

Related Stories:

>