போதிய கையிருப்பு இல்லை!: கன்னியாகுமரி மாவட்டத்தில் 122 தடுப்பூசி மையங்கள் மூடல்..பொதுமக்கள் ஏமாற்றம்..!!

கன்னியாகுமரி: தமிழ்நாட்டிற்கு போதுமான தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்காததால் கன்னியாகுமரி மாவட்டத்தில் 122 தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் தடுப்பூசி செலுத்த ஆர்வத்துடன் வந்த பொதுமக்கள்  ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 124 மையங்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணிகள் விறுவிறுப்பாக நடந்துவந்த நிலையில், ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி வந்தன. இந்நிலையில் மத்திய அரசு,  தமிழ்நாட்டிற்கு போதுமான தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்யாத காரணத்தால் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த தடுப்பூசி மையங்கள் படிப்படியாக மூடப்பட்டு வந்தன. 

இதனால் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வத்துடன் வந்த பொதுமக்கள் தடுப்பூசி இல்லாத காரணத்தால் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை ஏற்பட்டது. தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த 122 தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டு நாகர்கோவில் மற்றும் பத்மநாபபுரம் ஆகிய 2 இடங்களில் மட்டுமே செயல்பட்டு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் 2 தடுப்பூசி மையங்கள் செயல்பட்டு வந்த நிலையில், இரண்டு மையங்களும் தற்போது மூடப்பட்டிருப்பதாக தெரிவிக்கும் பொதுமக்கள், தமிழ்நாட்டிற்கு தேவையான தடுப்பூசிகளை காலதாமதம் இன்றி உடனடியாக மத்திய அரசு வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுப்பியுள்ளனர். 

Related Stories:

>