×

உலகிலேயே முதல்முறை எச்10என்3 பறவை காய்ச்சல் சீனாவில் ஒருவர் பாதிப்பு

பீஜிங்: சீனாவில் எச்10என்3 பறவை காய்ச்சல் வைரசால், உலகிலேயே முதல் முறையாக மனிதர் ஒருவர் பாதிக்கப்பட்டசம்பவம் நடந்துள்ளது. சீனாவின் பெயரை கேட்டாலே உலக நாடுகள் இப்போது நடுங்குகின்றன. புதிய நோய்கள், வைரஸ்களின் பிறப்பிடமாக இது உள்ளதே இதற்கு காரணம். உலகளவில் இதுவரையில் பரவி, பெரிய அளவில் மனித உயிர்களை பலி கொண்ட பல்வேறு வைரஸ் நோய்கள், இந்த நாட்டில்  இருந்துதான் உருவாகி இருக்கிறது. உலகத்தை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கும் கொரோனா வைரசும் சீனாவின் வுகான் நகரில் இருந்துதான் 2019 டிசம்பரில் முதலில் பரவியது.

தற்போது வரை உலகளவில் இந்த வைரசால் பல கோடி பேர் பாதிக்கப்பட்டு, லட்சக்கணக்கான மக்கள் இறந்து வருகின்றனர். இந்நிலையில், சீனாவில் மீண்டும் உலகளவில் இதுவரையில் நடந்திராத அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. எச்10என்3 என்பது, பறவைகளை தாக்கும் ஒரு வைரஸ். மிகவும் வீரியம் குறைந்தது. பெரும்பாலும், கோழிப்பண்ணைகள் மற்றும் பறவைகளின் பண்ணைகளில் இது காணப்படும். இந்த வைரஸ் தாக்கப்பட்டதால் சீனாவில் தற்போது ஒருவர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் இதுவரையில் இந்த வைரசால் யாரும் பாதிக்கப்பட்டது கிடையாது.

சீனாவில் நடந்திருப்பதுதான் முதல் முறை. ஜிங்சு மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்டவரின் வயது 41. இந்த நோய் பறவைகள் பண்ணையில் இருந்து பரவி இருக்கலாம் என கருதப்படுகிறது. ஆனால், இது அதிக அளவில் பரவுவதற்கான ஆபத்து  மிகவும் குறைவாக இருப்பதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். சீனாவில் ஏற்கனவே எச்5என்8, எச்5என்6 போன்ற பறவை காய்ச்சல் வைரஸ்கள் அதிகளவில் உள்ளன.


Tags : China , World's first H10N3 bird flu outbreak in China
× RELATED தென் சீன கடல் பகுதியில் நான்கு...