×

டிவிட்டரில் ஆள்மாறாட்டம்; துல்கர் சல்மான் எச்சரிக்கை

சென்னை: மலையாள நடிகர் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான், மலையாளம், தமிழ், இந்தி படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழில் ஹே சினாமிகா படத்தில் நடித்து வருகிறார். டிவிட்டரில் நடிகர், நடிகைகளின் பெயரில் நிறைய போலி பக்கங்கள் திறக்கப்பட்டுள்ளன. சிலர்  இது பற்றி புகார் கொடுத்தாலும் சில நடிகர், நடிகைகள் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றனர். இந்நிலையில் தனது பெயரில் ஏராளமான போலி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதால் துல்கர் சல்மான் கோபம்  அடைந்துள்ளார். அவர் கூறும்போது, ‘நான் அதிக கணக்குகளில் இல்லை. இந்த கணக்குகள் என்னுடையவை அல்ல. தயவுசெய்து சமூக வலைத்தளத்தில் என்னை ஆள்மாறாட்டம் செய்ய வேண்டாம்’ என்று டிவிட்டரில் பதிவு செய்து இருக்கிறார்.

Tags : Twitter ,Tulkar Salman , Impersonation on Twitter; Tulkar Salman warns
× RELATED தமிழிசை பற்ற வைத்த நெருப்பு பற்றி...