×

கலவை தடுப்பூசிக்கு வாய்ப்பில்லை கோவிஷீல்டு இனி ஒற்றை டோஸா?....

புதுடெல்லி: கோவிஷீல்டு ஒற்றை டோஸ் மட்டுமே செலுத்துவது, இரு வெவ்வேறு தடுப்பூசிகளை  கலந்து பயன்படுத்துவது போன்றவை உடனடியாக அமல்படுத்தப்படாது என மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.  நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதை சமாளிக்க மத்திய சுகாதார அமைச்சகம் பல்வேறு புதிய யுக்திகளை முயற்சித்து வருகிறது. அந்த வகையில், கோவிஷீல்டு, கோவாக்சின் இரு தடுப்பு மருந்துகளையும் ஒன்றாக கலந்து மக்களுக்கு செலுத்தவும், கோவிஷீல்டை ஒற்றை டோஸ் தடுப்பூசியாக மாற்றவும் முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

  இது குறித்து நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பில், ‘‘கோவிஷீல்டை ஒற்றை டோஸ் தடுப்பூசியாக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை. வழக்கம் போல் 2வது டோஸ் செலுத்தப்படும். இரு தடுப்பூசிகளை கலந்து பயன்படுத்துவது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த நெறிமுறையும் வகுக்கப்படவில்லை. அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட பிறகே அது குறித்து முடிவு செய்யப்படும்,’’ என்றார். இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம், அஸ்ட்ரஜெனிகா மருந்து நிறுவனமும் ஆரம்பத்தில் கோவிஷீல்டை உருவாக்கும் போது இது ஒற்றை டோஸ் தடுப்பு மருந்தாகவே இருந்தது. பின்னர் செயல்திறன் காரணமாக இந்த தடுப்பூசி 2 டோஸ் போடப்பட்டு வருகிறது.

தினமும் 1 கோடி பேருக்கு தடுப்பூசி:  இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் பல்ராம் பார்கவா அளித்த பேட்டியில், ‘‘தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏதுமில்லை. எல்லோரும் ஒரே மாதத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டுமென நினைத்தால் எப்படி சாத்தியமாகும்? அமெரிக்காவை போல் 4 மடங்கு அதிக மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியா. பொறுமை வேண்டும். ஜூலை நடுவில் அல்லது ஆகஸ்ட் தொடக்கத்தில் தினசரி 1 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள் தகுதியான அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு விடும்’’ என்றார்.

Tags : Cow Shield is no longer a single dose? ....
× RELATED காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அரசு...