×

திருமலை செல்லும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் 2 மடங்கு உயர்வு

திருமலை: திருமலைக்கு செல்லும் வாகனங்களுக்கான சுங்க கட்டணம் இருமடங்காக உயர்த்தப்பட்–்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு அலிபிரி மலைப்பாதை வழியாக செல்லும் வாகனங்களுக்கான சுங்க கட்டணத்தை உயர்த்த வேண்டும் என கடந்தண்டு மார்ச்சில் நடந்த தேவஸ்தான அறங்காவலர் கூட்டத்தில் முடிவு செய்து, அரசு அனுமதியும் பெறப்பட்டது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த முடிவு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், வாகனங்களுக்கான சுங்க கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது.

அதன்படி ஜீப், காருக்கு ரூ.15ல் இருந்து ரூ.50 ஆகவும், மினி பஸ் மற்றும் மினி லாரிக்கு ரூ.50ல் இருந்து ரூ.100ஆகவும், ஜேசிபி மற்றும் அதிக சரக்குகளை ஏற்றி செல்லும் லாரிகளுக்கு ரூ.200 ஆகவும்  கட்டணம்  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தினமும் 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வாகனங்கள் மூலம் பக்தர்கள் திருமலைக்கு வருகின்றனர். இதனால், சுங்க கட்டணம் செலுத்தி திருமலைக்கு செல்வதற்கு நீண்ட நேரம் அலிபிரி சோதனை சாவடியில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனை போக்கும் விதமாக தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ளதை போன்று பாஸ்ட் டேக் மூலம் சுங்க கட்டணம் வசூல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : Thirumalai , Customs duty on vehicles going to Thirumalai doubled
× RELATED ஈஷா மையத்தில் பணியாற்றி காணாமல் போன 6...