ஊடகப் பணியாளர்கள் அனைவருக்கும் சலுகை: முத்தரசன் கோரிக்கை

சென்னை: கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்்ட அறிக்கை: கொரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்புப் பணியில் பணிபுரியும் முன் களப்பணியாளர்கள் பெற்று வரும் உரிமைகள் ஊடகத் துறையினருக்கும் வழங்கப்படும் என்றும் தமிழக முதல்வர் அறிவித்தார். ஆனால் தற்போது அரசின் அங்கீகார அட்டைகள் பெற்ற ஊடகத்துறையினருக்கு மட்டுமே முதலமைச்சரின் அறிவிப்பு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக காட்சி ஊடகங்களில் செய்தி வாசிப்பாளர், செய்திப் பிரிவு பணியாளர்கள், உதவி ஆசிரியர்கள் உள்ளிட்ட ஆசிரியர் குழு உறுப்பினர்கள், அச்சு ஊடகங்களில் அச்சிட்ட பத்திரிகைகளை கட்டுகளாக கட்டுவோர் தொடங்கி, மாவட்ட தலைநகர் நிருபர்கள், வட்ட தலைநகர் மற்றும் முக்கிய நகரங்களில் உள்ள நிருபர்கள், புகைப்பட நிருபர்கள் என வாசகர்களுக்கு பத்திரிகை விநியோகிப்பவர்கள் வரை அனைவரும் ஊடகப் பணியாளர்களாகவே கருதப்பெறுவது அவசியமாகும்.  ஊடக நிறுவனத்தின் அடையாள அட்டை பெற்றுள்ள  அனைவரும் சலுகைகளையும், உரிமைகளையும் பெறும் வகையில் அரசாணை மேம்படுத்தி புதிய அரசாணை வெளியிட வேண்டும்.

Related Stories: