மிஸ்டர் மான் கி பாத் பிரதமரே!: என் கதையை முடித்துவிடலாம் என நினைக்கும் உங்கள் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது..முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசம்..!!

கொல்கத்தா: பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தன் கதையை முடித்துவிடலாம் என்று பிரதமர் நினைப்பதாகவும் அது ஒருபோதும் ஈடேறாது என்றும் முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆவேசமாக பேசியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், மிஸ்டர் பிரதமரே...மிஸ்டர் பிஸி பிரதமரே..., மிஸ்டர் மான் கி பாத் பிரதமரே... நீங்கள் என்ன விரும்புகிறீர்கள்?...என் கதையை முடித்துவிடலாம் என்று நினைக்கிறீர்களா?... ஒருபோதும் அது உங்களால் முடியாது. 

மக்களின் ஆதரவு எனக்கு இருக்கும் வரை அதனை உங்களால் செய்ய முடியாது. எதிர்க்கட்சிகள் ஆளும் அனைத்து மாநில அரசுகள், நாட்டின் அனைத்து மூத்த தலைவர்கள் என்.ஜி.ஓ.க்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளை உங்களுக்கு எதிராக அணி திரட்டி போராடுவேன். அனைவரும் ஒன்றிணைந்து மத்திய அரசுக்கு எதிராக போராட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடியை கடுமையாக விமர்சிக்கும் இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Related Stories:

>