×

ஜேமிசன் வலையில் கோஹ்லி சிக்குவார்: நியூசி. வேகம் டிம் சவுத்தி நம்பிக்கை

இந்தியா- நியூசிலாந்து இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஜூன் 18 முதல் 22ஆம் தேதிவரை இங்கிலாந்து சவுத்தாம்ப்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து நியூசிலாந்தின் மூத்த வேகப் பந்துவீச்சாளர் டிம் சவுத்தி கூறுகையில் ”ஆர்சிபி அணிக்காக கைல் ஜேமிசனும் - விராட் கோலியும் ஒன்றாக விளையாடுகிறார்கள். இதனை பயன்படுத்தி பயிற்சியின்போது ஜேமிசனிடம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை இறுதிப் போட்டியில் பயன்படுத்தப்படும் `டியூக்’ பந்து குறித்து விசாரித்துள்ளார். மேலும் ஜேமிசன் டியூக் பந்தை வீசியிருக்கிறாரா என்று கேட்டு தெரிந்து வைத்திருக்கிறார்.

இதிலிருந்து கோஹ்லி எவ்வளவு ஸ்மார்ட் ஆனவர் என புரிந்துக்கொள்ள முடிகிறது” என்ற அவர் மேலும் கூறுகையில் ”வலைப்பயிற்சியின்போது டியூக் பந்தை வைத்து ஜேமிசனை பவுலிங் போட சொல்லியிருக்கிறார் கோஹ்லி. ஆனால் ஜேமிசன் அதனை மிகவும் சாமர்த்தியமாக மறுத்திருக்கிறார். ஜேமிசன் செய்தது தவறே இல்லை. ஆனால் கோஹ்லி எவ்வளவு திறமையானவராக இருந்தாலும், ஜேமிசன் விரிக்கும் வலையில் கோஹ்லி நிச்சயம் சிக்குவார். அவரின் விக்கெட்டை வீழ்த்துவார்” என்று டிம்சவுத்தி கூறினார்.

Tags : Kohli ,Jamison ,New Zealand ,Tim Southee , Kohli caught in Jamison net: New Zealand. Speed Tim Southee hopes
× RELATED சதம் விளாசினார் கோஹ்லி ஆர்சிபி 183 ரன் குவிப்பு