×

‘பெங்காலி’ பிரதமர் யார்? டுவிட்டரில் டிரெண்டிங்

கொல்கத்தா: மேற்குவங்கத்தை சேர்ந்தவர் பெங்காலியை பிரதமராக தேர்வு செய்ய வேண்டும் என்ற அர்த்தத்தில் டுவிட்டரில் இன்று ‘பெங்காலிபிரைம்மினிஸ்டர்’ என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது. மேற்குவங்க மாநில முன்னாள் தலைமைச் செயலாளர் அலபனா பந்தோபாத்யா விவகாரம் தொடர்பாக மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. அலபனா நேற்றுடன் ஓய்வு பெற்ற நிலையில், தற்போது அவர் முதல்வர் மம்தாவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இன்று ​டுவிட்டரில் ‘#Bengali PrimeMinister’ என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆகிவருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, முதல்வர் மம்தா பானர்ஜி பேசும்போது, ஒரு நல்ல பிரதமர் தேவை என்று கூறியதாகவும், அதனால் அவர் பிரபலமான பெங்காலி பிரதமரை விரும்புகிறார் என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.  சுதந்திரம் பெற்றதிலிருந்து இதுவரை மேற்குவங்கத்தை சேர்ந்த எவரும்  பிரதமராகவில்லை. ஜனாதிபதி பதவிக்கு கூட மேற்குவங்கத்தை சேர்ந்தவர்  தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால், பிரதமர் எவரும் வரவில்லை.  நாடு 75வது சுதந்திர தின கொண்டாட்டங்களை கொண்டாட தயாராகி வரும் நிலையில்,  மேற்குவங்காள பிரதமரின் உத்தரவின் பேரில் என்ற வாசகங்களுடன் சமூக  ஊடகவாசிகள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Tags : Twitter , Who is the Prime Minister of 'Bengali'? Trending on Twitter
× RELATED ஏமாற்றுவதில் இது புது விதம்டா சாமி…...