தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை அனைவரும் ஆல் பாஸ், எந்த மாணவரையும் தேக்க நிலையில் வைக்கக் கூடாது: தொடக்க கல்வி இயக்குநர்

சென்னை: தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை அனைவரும் ஆல் பாஸ் என தொடக்க கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார். எந்த மாணவரையும் தேக்க நிலையில் வைக்கக் கூடாது,  எந்த குழந்தையையும் பள்ளியை விட்டு வெளியேற்றகூடாது எனவும் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுமைக்குட்பட்ட அனைத்து வகைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு உரிய அறிவுரைகளை இணையதளம், மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி வாயிலாக அறிவுறுத்தப்படுகிறது. 

மேற்படி பள்ளிகளின் 1ம் முதல் 8ம் வகுப்பு பயின்ற மாணவர்களின் அனைவரும் சார்ந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளித் தேர்ச்சி பதிவேட்டில் உரிய பதிவுகளை மேற்கொண்டு தொடர் நடவடிக்கை எடுக்க தேவையான அறிவுரைகளை மாவட்ட கல்வி அலுவலர்கள் எடுக்க தேவையான அறிவுரைகளை மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் வழங்கிட அனைத்து மாவட்ட முதன்மைச் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இப்பொருள் சார்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையின் விவரங்களை deesections@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அறிக்கையாக அனுப்பிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா தொற்று காரணமாக தளர்வில்லா ஊரடங்கு தற்போது நடைமுறையில் உள்ளது. எனவே தளர்வில்லா ஊரடங்கு முடிவிற்கு பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிக்கப்படும். மேலும் மாணவர்களுக்கான விலையில்லா பாடப் புத்தகங்கள் மற்றும் இதர நலத்திட்டங்கள் பள்ளிகள் திறந்தவுடன் வழங்குவது குறித்து அறிவிக்கப்படும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>