தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை அனைத்து பள்ளி மாணவர்களும் தேர்ச்சி: தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை அனைத்து பள்ளி மாணவர்களும் தேர்ச்சி என்று தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார். எந்த மாணவர்களையும் தேக்க நிலையில் வைக்க கூடாது, எந்த குழந்தையையும் பள்ளியை விட்டு வெளியேற்ற கூடாது. தலைமையாசிரியர்கள் பள்ளி பதிவேட்டில் மாணவர்களின் தேர்ச்சி விவரத்தை பதியவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், தளர்வில்லா ஊரடங்கு முடிந்த பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>