×

கொரோனாவை வெல்வோம்! நமக்கான வளம் மிகுந்த தமிழ்நாட்டை அமைப்போம்: கொரோனா சங்கிலியை உடைப்போம் : முதல்வர் ட்வீட்

சென்னை: கொரோனாவை வெல்வோம்! நமக்கான வளம் மிகுந்த தமிழ்நாட்டை அமைப்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். கொரோனா தொற்று தங்களை தாக்கமால் இருக்க ஒவ்வொருவரும் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என ட்வீட்டரில் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டார். பொதுமக்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு தொற்றை பரப்பிவிடாமல் கவனமாக இருக்க வேண்டும் என கூறினார். ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவும் கொரோனா சங்கிலியை உடைத்தாலே தொற்றை கட்டுப்படுத்தி விடலாம். கடந்த மே 24 முதல் 7 நாட்களுக்கு தளர்வுகளற்றி முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. 


முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது முதல் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் படிப்படியாக தொற்று குறைந்துள்ளது. சென்னையில் 7 ஆயிரத்தை தொட்ட கொரோனா பாதிப்பு தற்போது 2,000-ஆக குறைந்துள்ளது. இன்னும் சில நாட்களில் சென்னையில் கொரோனா தொற்று முழுமையாக குறைந்துவிடும். கோவை உள்ளிட்ட மேற்கு மண்டலத்தில் கொரோனா தொற்று கடந்த வாரம் அதிகமாக இருந்தது. தொற்றை முழமையாக கட்டுப்படுத்த முழு ஊரடங்கு தவிர வேறு வழியில்லை என்பதை அனைவரும் உணர வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வீடியோவில் கூறினார். 


ஊரடங்கு காரணமாக மக்கள் பாதிப்படுவதை உணர்ந்து அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்து தந்துள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். மக்களை நோக்கி காய்கறி, மளிகை, பொட்கள் வந்து சேர ஏற்பாடு செய்துள்ளோம், ரேசன் கடைகள் திறந்துள்ளன என கூறினார். பொதுமக்களுக்கு தேவையான 13 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட உள்ளது என கூறினார். ஊரடங்கால் குறிப்பிட்ட பிரிவினர் பாதிப்பால் கொரோனா நிவாரண நிதியாக ரூ.2000 வழங்கி உள்ளோம் என கூறினார். விரைவில் எஞ்சிய ரூ.2000 கொடுக்கப்போகிறோம் என தெரிவித்தார்.



Tags : Tamil Nadu , Corona, Velvom, Tamil Nadu, Organization, Chief, Tweet
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...