×

மத்திய நிதியமைச்சகத்தால் அமைக்கப்பட்ட குழுவை மாற்றியமைத்து தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனை இடம் பெற செய்ய வேண்டும்: இந்திய தொழில்முனைவோர் கூட்டமைப்பு வேண்டுகோள்

சென்னை:  இந்திய தொழில் முனைவோர் கூட்டமைப்பின் தலைவர் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: மத்திய நிதியமைச்சகத்தில் இருந்து  ஜிஎஸ்டி வரி குறைப்போ அல்லது விலக்கோ கோவிட் சம்பந்தப்பட்ட மெடிக்கல் எக்ப்யூமெண்ட்டுக்கு கொடுப்பதற்காக 8 மாநிலத்தை சேர்ந்த ஒரு குழு அமைத்துள்ளனர். இது, மிகுந்த ஏமாற்றத்தை தருகிறது. இந்திய கூட்டமைப்பின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். ஏனென்றால் இந்த குழுவில் எட்டு மாநிலத்தை  சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அதாவது மேகாலாயா, குஜராத், மகாரஷ்டிரா, கோவா, ஒடிசா, கேரளா, தெலுங்கானா, உத்திரபிரசேதம் ஆகும். இந்த பிரச்சனையை ஜிஎஸ்டி கவுன்சிலில் எழுப்பியது தமிழகத்தின் நிதியமைச்சர். நிறைய பேருக்கு சம்பளம் இல்லை, வருமானம் இல்லை,  பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவின் நோய் தாக்கம் அதிகமாக உள்ளது. இதில் அவர்கள் செலவை குறைப்பதற்கு உண்டான அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.  

இதில் சானிடைசர், சோப்புக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி உள்ளது. அதேபோன்று சர்ஜிக்கல் ரப்பர் கையுறைக்கு, வென்டிலேட்டருக்கு 12%, டிஸ்இன்பெக்சனுக்கு, தெர்மா மீட்டருக்கு 18%  ஜிஎஸ்டி உள்ளது. இவை அனைத்திற்கும் கொரோனா நோய் தாக்கம் இருக்கும் வரை விலக்கு கொடுக்க வேண்டும் என் முதன்முதலாக குரல் கொடுத்தது தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தான். தமிழகம் தொழில்துறையில் அதிக ஜிஎஸ்டியை ஈட்டித் தரும் மாநிலம். இந்த குழுவில் தமிழகம் இடம்பெறாது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இந்த நேரத்தில் அரசியல் கூடாது. இது சாமானிய, எளிய மக்களுடைய  வாழ்வாதார பிரச்சினை. நோயில் இருந்து காப்பாற்ற தமிழக அரசு எடுத்து வரும் அனைத்து முயற்சிகளும் பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்பட்டு வரக்கூடிய நேரத்தில் இது மத்திய அரசு நிச்சயமாக ஏற்றுக்கொள்ள வேண்டிய யோசனை தான். எனவே இந்த குழுவை உடனடியாக மாற்றியமைத்து குழுவில் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனை இடம் பெற செய்ய வேண்டும்.


Tags : Tamil ,Nadu ,Finance Minister ,PDR Palanivel Thiagarajan ,Central Ministry of Finance ,Indian Entrepreneurs Federation , Tamil Nadu Finance Minister PDR Palanivel Thiagarajan should be made to replace the committee set up by the Central Ministry of Finance: Entrepreneur Federation of India Request
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து