×

தோண்ட தோண்ட பூதாகரமாகும் பத்மா சேஷாத்திரி பள்ளியின் பாலியல் விவகாரம்: சிறப்பு பயிற்சி கொடுப்பதாக பள்ளி வளாகத்தில் மாணவிகளை மிரட்டி கராத்தே மாஸ்டர் பலாத்காரம்

* பலமுறை நேரில் பார்த்ததாக நண்பர்கள் 3 பேர் போலீசில் ஒப்புதல் வாக்குமூலம்
* வெளியூர் போட்டிகளின்போது ஓட்டல் அறையில் நண்பர்களுக்கும் விருந்தாக்கியது அம்பலம்
* பத்மா சேஷாத்திரி பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க சட்ட நிபுணர்களுடன் போலீஸ் ஆலோசனை

சென்னை: தற்காப்பு கலை சிறப்பு பயிற்சி கொடுப்பதாக மாணவிகளை பள்ளியின் தனி அறைக்கு அழைத்து சென்று மிரட்டி பாலியல் பலாத்காரம் ெசய்ததாக, பத்மா சேஷாத்திரி பள்ளியின் கராத்தே மாஸ்டர் கெவின்ராஜ் மீது அவரது நண்பர்கள் 3 பேர் போலீசாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர். வெளியூர் போட்டிகளுக்கு செல்லும் போது சக நண்பர்களுக்கும் மாணவிகளை விருந்தாக்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதேநேரம் பாலியல் விவகாரத்தில் பத்மா சேஷாத்திரி பள்ளி நிர்வாகத்திற்கு தொடர்பு இருப்பதாக மாணவிகள் வாக்குமூலம் அளித்துள்ளதால், பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க சட்ட நிபுணர்களுடன் போலீசார் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் பிரபலமான பள்ளிகளில் ஒன்றாக பத்மா சேஷாத்திரி பள்ளி குழுமம் இயங்கி வருகிறது. இந்த குழுமம் சார்பில் நடத்தப்படும் பள்ளிகளில் தமிழகம் முழுவதும் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த வாரம் கே.ேக.நகரில் உள்ள பத்மா சேஷாத்திரி பள்ளியின் மாணவிகள் சிலர் தங்களது டிவிட்டர் பக்கத்தில் வணிகவியல் துறை ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்பின் போது அரை நிர்வாணத்துடன் துண்டு கட்டிக்கொண்டு பாடம் எடுப்பதாகவும், வாட்ஸ்அப் எண்ணில் ெமசேஜ் அனுப்பி தொடர் பாலியல் தொந்தரவு கொடுப்பதாகவும் பதிவு செய்தனர். மாணவிகள் பதிவு செய்த சிறிது நேரத்தில் இது இந்திய அளவில் டிரெண்டிங்கானது. இதுகுறித்து மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் மற்றும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் கடும் கண்டனம்  தெரிவித்தனர். அதைதொடர்ந்து மாநகர காவல்துறை தாமாக முன்வந்து பத்மா சேஷாத்திரி பள்ளி மாணவிகளுக்கு அளிக்கப்பட்ட பாலியல் தொடர்பாக விசாரணையை தொடங்கியது. மேலும், பாலியல் தொந்தரவுக்கு ஆளான பத்மா சேஷாத்திரி பள்ளி மாணவிகள் புகார் அளிக்க 94447 72222 என்ற வாட்ஸ்அப் எண்ணை அறிவித்தது.

புகார் அளிக்கும் மாணவிகளின் பெயர் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். அதைதொடர்ந்து பத்மா சேஷாத்திரி பள்ளியில் படித்து வரும் மாணவிகள் மற்றும் முன்னாள் மாணவிகள் என 40க்கும் மேற்பட்ட மாணவிகள் நேற்று வரை புகார் அளித்துள்ளனர்.  மாணவிகளின் பாலியல் புகாரின்படி பத்மா சேஷாத்திரி பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் மீது போக்சோ உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அதிரடியாக அசோக் நகர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். பின்னர் ஆசிரியர் ராஜகோபாலனிடம் நடத்திய விசாரணையில், கடந்த 10 ஆண்டுகளாக பத்மா சேஷாத்திரி பள்ளியில் படித்து வரும் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவிகளை மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது தெரியவந்தது. அதற்கு ஆதாரமாக, ஆசிரியர் ராஜகோபாலனிடம் கைப்பற்றப்பட்ட லேப்டாப்பில் 100க்கும் மேற்பட்ட மாணவிகளின் ஆபாச படங்கள் இருந்தது தெரியவந்தது.

10 ஆண்டுகள் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது எப்படி பள்ளி நிர்வாகத்தின் கவனத்திற்கு செல்ல வில்லை என்று போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பத்மா சேஷாத்திரி பள்ளி நிர்வாகத்திடம் பாதிக்கப்பட்ட மாணவிகள் பலமுறை புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீதும் அதற்கு துணையாக இருந்த சக ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரியவந்தது. ஏன் என்றால், பாலியல் குற்றச்சாட்டில் உள்ள ஆசிரியர் ராஜகோபாலன் உட்பட 4 ஆசிரியர்களும் 20 ஆண்டுகளுக்கு மேலாக பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றி வருவது தான் என்று தெரியவந்தது. இதற்கிடையே பத்மா சேஷாத்திரி பள்ளி முதல்வர் கீதா மற்றும் தாளாளர் ஷீலா ஆகியோரிடம் தி.நகர் துணை கமிஷனர் அரிகிரன் பிரசாத் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கண்காணிப்பாளர் ஜெயலட்சுமி ஆகியோர் 2 நாட்கள் நேரடி விசாரணை நடத்தினர். அப்போது இருவரும் மாணவிகளின் பாலியல் குற்றச்சாட்டிற்கு உரிய பதில் அளிக்காமல் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர். அதேநேரம் போலீசாரின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளிக்காமல் மவுனமாக இருந்து வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

ஆசிரியர் ராஜகோபாலனால் பாலியல் தொந்தரவுக்கு ஆளான மாணவிகள் அளித்த புகாரின்படி அவர்களிடம் தனித்தனியாக மகளிர் போலீசார் ரகசிய விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியது. மாணவிகள் அளித்த வாக்குமூலங்கள் அனைத்தும் பத்மா சேஷாத்திரி பள்ளி நிர்வாகத்திற்கு எதிராகவே உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் போலீசார் மாணவிகளின் பாலியல் வழக்கில் பள்ளி நிர்வாகத்தின் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை கேட்டுள்ளதாகவும், சட்ட நிபுணர்கள் அளிக்கும் தகவலை தொடர்ந்து விரைவில் பத்மா சேஷாத்திரி பள்ளி நிர்வாகத்தின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும் என்றும் உயர் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு அதிர்ச்சி அதிரும் வகையில், பத்மா சேஷாத்திரி பள்ளி குழுமம் நடத்தி வரும் பள்ளி மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விருகம்பாக்கம் கிளையில் உள்ள பத்மா சேஷாத்திரி மில்லினியம் பள்ளியில் படித்து வரும் மாணவிகளுக்கு தற்காப்பு கலைகள் சொல்லிக்கொடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் பள்ளியில் கராத்தே பயிற்சியில் ஈடுபட்ட மாணவிகளை பள்ளியின் தனி அறைக்கு அழைத்து சென்று மாணவிகளின் அந்தரங்க பகுதிகளில் கைகளை வைத்து பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக பத்மா சேஷாத்திரி மில்லினியம் பள்ளியின் கராத்தே மாஸ்டர் கெவின்ராஜ் என்பவர் மீது பாதிக்கப்பட்ட 2 மாணவிகள் மாநகர காவல் துறை அறிவித்த வாட்ஸ் அப் புகார் எண்ணிற்கு புகார் அளித்தனர். அந்த புகாரின்படி அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீசார் அண்ணாநகர் எச். பிளாக் 12வது மெயின் ரோட்டு பகுதியில் வசித்து வரும் கராத்தே மாஸ்டர் கெவின்ராஜை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது கராத்தே மாஸ்டர் கெவின்ராஜ் தனது தற்காப்பு பயிற்சிக்கு அதிகாலையில் பள்ளிக்கு வரும் மாணவிகள் பயிற்சி உடையை மாற்றும் போது, மாணவிகளுக்கு தெரியாமல் மறைந்து இருந்து தனது செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். அதோடு இல்லாமல் பள்ளிகளுக்கு இடையே மாநில அளவில் நடைபெறும் தற்காப்பு போட்டியில் கலந்துகொள்ள மாணவிகளை அழைத்து செல்லும் போது, ஓட்டல் அறையில் வைத்து பழைய வீடியோக்களை காட்டி மிரட்டி நண்பர்களுடன் பாலியல் பலாத்காரம் செய்து வந்தது தெரியவந்தது.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், உடனே கராத்தே மாஸ்டர் கெவின்ராஜின் நண்பர்கள் 3 பேரை பிடித்து நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை விடிய விடிய தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததை மறைக்காமல் கூறினீர்கள் என்றால் உங்கள் 3 பேரை இந்த வழக்கில் இருந்து விடுவிக்கிறோம் என்று போலீசார் தெரிவித்தனர்.  இல்லையென்றால், உங்களையும் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். அதைகேட்ட 3 பேரும் தங்களது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தனது நண்பரான கராத்தே மாஸ்டர் கெவின்ராஜ் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அனைத்து விவரங்களையும் மறைக்காமல் போலீசாரிடம் கூறியுள்ளனர். பயிற்சிக்கு வரும் மாணவிகளை கராத்தே மாஸ்டர் கெவின்ராஜ் மிரட்டி பள்ளி வளாகத்தில் உள்ள அறையிலேயே பாலியல் பலாத்காரம் செய்வார். அதை நாங்கள் பலமுறை நேரில் பார்த்து இருக்கிறோம்.

சில நேரங்களில் நாங்களும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தோம் என்று ஒப்புக்கொண்டுள்ளனர். இதை, நீதிமன்றத்தில் வாக்குமூலமாகவும் கொடுக்க தாங்கள் தயாராக இருப்பதாக அப்ரூவராக 3 பேரும் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதைதொடர்ந்து பத்மா சேஷாத்திரி பள்ளியின் கராத்தே மாஸ்டர் கெவின்ராஜ் மீது பாலியல் பலாத்காரம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட பத்மா சேஷாத்திரி பள்ளி கராத்தே மாஸ்டர் கெவின்ராஜை சைதாப்ேபட்டையில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்ப்படுத்தினர். பின்னர் நீதிபதி மகாராஜன் உத்தரவுப்படி போலீசார் வரும் 14ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.பத்மா சேஷாத்திரி பள்ளியின் கராத்தே மாஸ்டர் கெவின்ராஜ் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்த பாதிக்கப்பட்ட மாணவிகள் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மற்றும் காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட வாட்ஸ்அப் எண்ணில் புகார் அளித்து வருகின்றனர்.

நேற்று வரை அண்ணாநகரை சேர்ந்த மாணவி ஒருவர் கராத்தே மாஸ்டர் தன்னை ஜூடோ பயிற்சிக்காக 2014ம் ஆண்டு நாமக்கல் சென்ற போது, காரில் வைத்து கொலை மிரட்டல் விடுத்து பாலியல் பலாத்காரம் செய்தார் என்று புகார் அளித்தார். அதேபோல் மேலும், 3 மாணவிகள் கராத்தே மாஸ்டர் கெவின்ராஜ் மீது புகார் அளித்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவிகள் பத்மா சேஷாத்திரி பள்ளியின் கராத்தே மாஸ்டர் மீது தொடர் புகார் அளித்து வருகின்றனர். இதனால் கராத்தே மாஸ்டர் கெவின்ராஜை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். பத்மா சேஷாத்திரி பள்ளி மாணவிகளின் பாலியல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 2 ஆசிரியர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் வாக்குமூலம் பத்மா சேஷாத்திரி பள்ளிக்கு எதிராக அமைந்துள்ளது. இது, பத்மா சேஷாத்திரி பள்ளியில் படித்து வரும் மாணவிகளின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணைக்கு பத்மா சேஷாத்திரி பள்ளி டீன், முதல்வர் ஆஜராக வில்லை
பத்மா சேஷாத்திரி பள்ளி மாணவிகளுக்கு தொடர் பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கு தொடர்பாக சென்னை மாவட்ட குழந்தைகள் நலக் குழு சார்பில் நேற்று காலை 11 மணிக்கு நேரில் ஆஜராகும்படி கடந்த வாரம் சம்மன் அனுப்பி இருந்தனர். சென்னை மாவட்ட குழந்தைகள் நலக்குழு சார்பில் அளிக்கப்பட்ட சம்மன்படி பத்மா சேஷாத்திரி பள்ளி டீன் மற்றும் முதல்வர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவில்லை. இதையடுத்து சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழு சார்பில் மீண்டும் பத்மா சேஷாத்திரி பள்ளி டீன் மற்றும் முதல்வருக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். அந்த சம்மனில் வரும் 4ம் தேதி காலை 11 மணிக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழு அலுவலகத்தில் மாணவிகள் பாலியல் தொடர்பான அனைத்து ஆவணங்களுடன் நேரில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் ராஜகோபாலன் ஜாமீன் கோரி மனு
சென்னை கே.கே.நகரில் உள்ள பத்மா சேஷாத்திரி பாலபவன் பள்ளியில் 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு வணிகவியல் ஆசிரியராக உள்ளவர் ராஜகோபாலன். அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த 2016ம் ஆண்டில் 12ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவி ஒருவர் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் ராஜகோபாலனை கடந்த 24ம் தேதி கைது செய்தனர். அவர் மீது பாலியல் வன்முறையை தூண்டியது, சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது, மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு ெசய்யப்பட்டது.

இந்த நிலையில் ராஜகோபாலன் தனக்கு ஜாமீன் கோரி சென்னை போக்சோ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு போக்சோ நீதிமன்ற நீதிபதி முகமது பரூக் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, விசாரணையை வரும் 3ம் தேதிக்கு தள்ளிவைத்தார். இதேபோல் ராஜகோபாலனை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோரி போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் நீதிபதி முகமது பரூக் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை படித்த நீதிபதி, இந்த மனு மீது நாளை (இன்று) விசாரணை நடத்தப்படும் என்று உத்தரவிட்டார்.

Tags : Padma Seshadri ,Karate , Padma Seshadri school sexual harassment case: Karate master rapes students on school premises for giving special training
× RELATED சென்னையில் மோடியின் ரோடு ஷோ நடைபெறும்...