தனியார் மருத்துவமனைக்கு வருகை: மும்பையில் இருந்து 2 லட்சம் கோவிஷீல்டு

சென்னை: மும்பையிலிருந்து 2 லட்சம் டோஸ் கோவிசீல்டு தடுப்பூசிகள் மும்பையிலிருந்து விமானத்தில் சென்னை வந்தன. ஆனால் அவைகள் அனைத்தும் சென்னையில் உள்ள 3 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2ம் அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. தளா்வுகளற்ற முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதோடு தடுப்பூசிகள் போடுவதை தீவிரப்படுத்தியுள்ளது.  மேலும் தடுப்பூசிகள் சிறப்பு முகாம்கள்,மாற்றுத்திறனாளிகளுக்கு அவா்களுடைய இருப்பிடங்களுக்கே நேரில் சென்று தடுப்பூசிகள் போடுதல் போன்றவைகளிலும் தமிழக அரசு ஈடுப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன. ஆனால் மத்திய அரசு தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை முழுமையாக வழங்காமல் குறைவாகவே வழங்குகிறது.

இதையடுத்து தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகளை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும் என்று மாநில அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனாலும் தனியார் மருத்துவ நிறுவனங்களுக்கு தடுப்பூசிகளை அனுப்புகிறது. ஆனால் தமிழக அரசுக்கு கடந்த சில நாட்களாக தடுப்பூசிகள் வரவில்லை. இந்நிலையில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு மும்பையிலிருந்து சென்னை வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் 2 லட்சம் டோஸ்  கோவிசீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தன. இவைகள் அனைத்தும் சென்னையில் உள்ள 3 தனியார் மருத்துவமனைகளுக்காக வந்திருந்தன. 18 பாா்சல்களில் 588 கிலோ தடுப்பூசி மருந்து பாா்சல்களை விமானத்திலிருந்து கீழே இறக்கியதும், விமானநிலைய அதிகாரிகள் அந்த தடுப்பூசி  மருந்து பார்சல்களை தனியார் மருத்துவமனை எஜென்சிகளிடம் ஒப்படைத்தனா்.

Related Stories: