×

இஸ்ரேலில் புதிய கூட்டணியால் திடீர் திருப்பம்: ஆட்சியை இழக்கிறார் நெதன்யாகு

இஸ்ரேல்: இஸ்ரேலின் நீண்ட கால பிரதமரான பெஞ்சமின் நெதன்யாகு ஆட்சியை இழக்க நேரிட்டுள்ளது.  இஸ்ரேலின் நீண்ட கால பிரதமர் என்ற பெருமைக்குரியவர் பெஞ்சமின் நெதன்யாகு. அவர் மீது மீடியாக்களுக்கு லஞ்சம் கொடுத்தது, வெளிநாட்டு ஒப்பந்தத்தில் முறைகேடு செய்தது உள்ளிட்ட 6க்கும் மேற்பட்ட ஊழல் புகார்கள் கூறப்பட்டது. இதனால், இஸ்ரேல் அரசியலில் கடந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் இருந்து நிலையற்ற தன்மை நிலவி வந்தது. கடந்த 2 வருடங்களில் 4 முறை பாராளுமன்ற தேர்தல் நடந்துள்ளது. நான்கு  முறையும் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுட் கட்சி பெரும்பான்மை பெறவில்லை.  இதையடுத்து, அங்கு எந்த  கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத நிலையில் பெஞ்சமின் நெதன்யாகு காபந்து  பிரதமராக தொடர்ந்தார். பெரும்பான்மை இல்லாத காரணத்தால் பெஞ்சமின் நெதன்யாகு ஆட்சியை இழக்கிறார்.  அங்கு எதிர்க்கட்சிகளுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம்  கொடுக்கப்பட்டது.

பின் இஸ்ரேல் காசா மோதலால் இந்த அவகாசம்  நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் வரும் புதன் கிழமைக்குள் அங்கு  எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். அங்கு  எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு தீவிர இடதுசாரி கட்சியான யாமினாவின் தலைவர்  பென்னட் ஆதரவு அளித்துள்ளார்.இந்த கூட்டணியில் பிரதான கட்சியாக யாஷ் அடிட் கட்சி இருக்கும். இதன் தலைவர் யார் லாபிட்தான் இந்த கூட்டணியை முன்னின்று வழிநடத்துவார். இந்த எதிர்க்கட்சி கூட்டணியில் பென்னட் 2 வருடமும், லாபிட் கடைசி 2 வருடமும் பிரதமராக இருப்பார்கள். அங்கு  எதிர்க்கட்சி கூட்டணியில் வலதுசாரி கட்சி, தீவிர வலதுசாரி கட்சி, மய்ய  கட்சி, அரபு ஆதரவு கொண்ட கட்சி என்று எல்லா விதமான கட்சிகளும் உள்ளன.   இஸ்ரேல் போன்ற ஒரு நாட்டில் இப்படி அனைத்து விதமான கொள்கை கொண்ட கட்சிகளும்  ஆட்சி அமைப்பது புதிய திருப்பத்தை ஏற்படுத்தும்.

வரும் புதன் கிழமைக்குள்  இந்த கூட்டணி ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட காலமாக ஆட்சியில் இருக்கும் பெஞ்சமின் கூட்டணியை உடைக்க முயல்வார் என கூறப்படுகிறது. புதிய கூட்டணி ஆட்சி அமைக்காவிட்டால், மீண்டும் பொதுத் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது.

Tags : Netanyahu ,Israel , Netanyahu loses power in Israel
× RELATED இஸ்ரேல் ஏற்படுத்திய பேரழிவுக்கு...