×

நடிகை சாந்தினியுடன் குடும்பம் நடத்தி, நிர்வாண படங்களை வெளியிடுவேன் என மிரட்டிய விவகாரம்: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் குடும்பத்துடன் தலைமறைவு

* சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் ராமநாதபுரத்திற்கு விரைந்தது தனிப்படை

சென்னை: ஒரே வீட்டில் 5 ஆண்டுகள் குடும்பம் நடத்திவிட்டு நடிகை சாந்தினியின் நிர்வாண படங்களை வெளியிடுவேன் என கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தனது குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து மணிகண்டனை பிடிக்க சென்னையில் இருந்து தனிப்படை போலீசார் ராமநாதபுரத்திற்கு விரைந்துள்ளனர். நாடோடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாந்தினி (36). மலேசிய குடியுரிமை பெற்ற இவர், மலேசிய சுற்றுலா வளர்ச்சி கழக தூதரகத்தில் வேலை செய்து வந்தார். 2017ம் ஆண்டு அதிமுக அமைச்சரவையில் தமிழக தொழில் நுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டனுடன் அவரது நண்பர் பரணி என்பவர் மூலம் நடிகைக்கு நட்பு கிடைத்துள்ளது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறி அமைச்சர் மணிகண்டன் நடிகை சாந்தினியை திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். முதலில் அமைச்சரின் ஆசைவார்த்தையை ஏற்க மறுத்த நடிகை பிறகு திருமணத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளார்.

அதன் பிறகு பெசன்ட் நகர் மதுரிதா அப்பார்ட்மென்டில் மணிகண்டன் மற்றும் நடிகை சாந்தினி ஆகியோர் கணவன், மனைவி போல் வசித்து வந்துள்ளனர். மேலும், மணிகண்டன் சென்னையில் இருக்கும் போது நடிகை வீட்டில்தான் தங்குவார். இதனால் நடிகை 3 முறை கருவுற்றுள்ளார். ஒவ்வொரு முறையும் மணிகண்டன் ஏதாவது ஒரு காரணத்தை கூறி அவரது நண்பர் டாக்டர் அருண் நடத்தி வரும் கோடம்பாக்கம் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்துள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த மணிகண்டன் பலமுறை நடிகை சாந்தினியை அடித்து உதைத்துள்ளார். அதன் பிறகு சாந்தினியை சந்திப்பதை தவிர்த்து வந்துள்ளார். இதுகுறித்து நடிகை அமைச்சர் மணிகண்டனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர், ஒழுங்கா மலேசியாவிற்கே சென்று விடு, இல்லையென்றால் ஒன்றாக இருக்கும் போது எடுக்கப்பட்ட நிர்வாண படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். அதோடு இல்லாமல் மணிகண்டன் டெலிகிராம் மூலம் நடிகை குளியல் அறையில் நிர்வாணமாக குளித்த புகைப்படத்தை அவருக்கு அனுப்பி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

மணிகண்டன் மிரட்டலால் அதிர்ச்சியடைந்த நடிகை சாந்தினி, சம்பவம் குறித்து உரிய ஆவணங்களுடன் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது புகார் அளித்தார். புகாரின்படி நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டார். அதன்படி போலீசார் நடத்திய விசாரணையில், நடிகை சாந்தினியுடன் குடும்பம் நடத்தி கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. தொடர்ந்து, போலீசார் நேற்று முன்தினம் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது ஐபிசி 313,323,376,417,506(i) மற்றும் 67(ஏ) ஐடி ஆக்ட் ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து போலீசார் விசாரணைக்கு நேரில் ஆஜராக கோரி சம்மன் அனுப்பினர். முன்னாள் அமைச்சர் என்பதால் சம்மன் குறித்து தகவல் தெரிவிக்க போலீசார் மணிகண்டன் பயன்படுத்தி வரும் 2 செல்போன் எண்ணிற்கும் தொடர்பு கொண்டனர். ஆனால் அவரது இரண்டு செல்போன் எண்களும் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்தது.

அதைதொடர்ந்து மணிகண்டன் கடைசியாக பேசிய டவர் ெலாக்கேஷனை வைத்து விசாரணை நடத்திய போது, நாகூரில் உள்ள அவரது நண்பர்களுக்கு பேசியது தெரியவந்தது. இதனால் அவர் நாகூரில் பதுங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதேநேரம், நடிகை அளித்த புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்த தகவலை அறிந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தனது குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில் மதுரையில் உள்ள வீடு கடந்த 2 நாட்களாக பூட்டப்பட்டுள்ளது. அவரது சொந்த ஊரான ராமநாதபுரத்தில் உள்ள வீட்டிலும் மணிகண்டன் இல்லை. இதையடுத்து, மணிகண்டனை பிடிக்க சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் சென்னையில் இருந்து 2 தனிப்படையினர்  ராமநாதபுரத்திற்கு விரைந்துள்ளதாக உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போலீசாரின் கைதில் இருந்து தப்பிக்க நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் ெசய்ய மணிகண்டன் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது. நடிகை அளித்த பாலியல் பலாத்கார புகாரில், முன்னாள் அமைச்சர் ஒருவர் சிக்கியுள்ளது பொதுமக்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகூரில் பதுங்கல்?
தலைமறைவான முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் 2 செல்போன் எண்கள் உள்ளன. நேற்று முன்தினம் அதிகாலை முதலே அவரது செல்போன்கள் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் உள்ள அவரது வீட்டிலிருந்து நேற்று முன்தினம் அதிகாலை கிளம்பிச் சென்றுள்ளார். கீழக்கரை பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் அவர் பதுங்கி இருப்பதாகவும் தகவல்கள் பரவின. இதன்பேரில் இப்பகுதியில் போலீசார் விசாரணை நடத்தினர்.மதுரை அண்ணாநகர் பகுதியில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சொந்த வீடு உள்ளது. மாதத்தில் 10 நாட்கள் வரை அவர் மதுரையில் உள்ள வீட்டில் தங்குவது வழக்கம். தற்போது அங்கும் அவர் இல்லை.

ஏற்கனவே மணிகண்டன் கட்டணம் செலுத்தி, தனது மதுரை வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போட்டிருந்தார். இந்த பாதுகாப்பு போலீசார் இந்த வீட்டு முன்பு இப்போதும் இருந்து வருகின்றனர். இதுதவிர, தனிப்படை போலீசார் விசாரணையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு மிகவும் நெருக்கமான நண்பர்கள், நாகப்பட்டினம் மாவட்டம், நாகூரில் உள்ளனர் என்பதும், அவர்களுடன் கடைசியாக அவர் செல்போனில் பேசியதும் தெரிய வந்துள்ளது. இதனால் அவர் நாகூரில் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதையடுத்து தனிப்படை போலீசாரில் ஒரு பிரிவினர் நாகூர் சென்று, விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Tags : Chandini ,AIADMK ,minister ,Manikandan , Actress Chandini's family threatened to release nude pictures: AIADMK ex-minister Manikandan goes into hiding with family
× RELATED அதிமுகவினர் வேண்டுமென்றே தகராறு...