×

திருக்கழுக்குன்றத்தில் விதிகளை மீறிய மளிகை கடைக்கு சீல்: 2 நிறுவனங்களுக்கு அபராதம்

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில் கொரோனா ஊரடங்கு விதிகளை மீறி செயல்பட்ட 2 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், விதிகளை மீறிய ஒரு மளிகைக் கடைக்கு சீல் வைக்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது வரும் 7-ம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், திருக்கழுக்குன்றம் பகுதியில் கடந்த வாரம் ஒரு மளிகை கடை அரசு விதிகளை மீறி இயங்கி வந்ததாக தெரியவந்தது. இதேபோல் ஒரு எக்ஸ்போர்ட் நிறுவனம், ஆயில் மில் ஆகிய 2 நிறுவனங்கள் ஊரடங்கு விதிகளை மீறி இயங்கியதாக திருக்கழுக்குன்றம் வருவாய்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இந்நிலையில், திருக்கழுக்குன்றம் தாசில்தார் துரைராஜன், துணை தாசில்தார் மணிவண்ணன், வருவாய் ஆய்வாளர் ஜேம்ஸ், விஏஓ சுதாகர் ஆகியோர் நேற்று சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில், ஊரடங்கு விதிகளை மீறி இயங்கி வந்த ஆயில் மில், எக்ஸ்போர்ட் நிறுவனத்துக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். மேலும், முகக்கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத ஒரு மளிகை கடையை மூடி அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Tags : Thirukkalukkunram , Seal of the grocery store for violating the rules in Thirukkalukkunram: 2 companies fined
× RELATED திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர்...