×

சீன ஆய்வகத்தில் உருவான கொரோனா? ஆதாரத்தை திரட்டிய இங்கிலாந்து

லண்டன்: உலகையே அச்சுறுத்தும் கொடூர கொரோனாவின் தோற்றம் தொடர்ந்து உலக நாடுகளால் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் கிருமி சீனாவின் உயிரியல் ஆய்வகத்தில் இருந்து வெளியானதற்கான சாத்தியம் இருப்பதாக இங்கிலாந்து புலனாய்வு முகமை அதிகாரிகள் ஆதாரம் திரட்டியுள்ளனர். கொரோனா தோற்றம் குறித்து உலக சுகாதார நிறுவனம் முழுமையாக புலனாய்வு செய்ய வேண்டும் என்று இங்கிலாந்து தடுப்பூசிகள் துறை அமைச்சர் நவீன் வலியுறுத்தியுள்ளார்.

பிரிட்டன் உட்பட மேற்கத்திய புலனாய்வு அமைப்புகளின் விசாரணையில் கொரோனா வவ்வால்களின் உடலில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டது என்பதை உறுதி செய்துள்ளனர். இதனை மீண்டும் உறுதி செய்த ஆய்வாளர்களின் தகவல்களை சுட்டிக்காட்டி தி சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. கொரோனா முதன் முதலில் கண்டறியப்பட்ட சீனாவின் உகான் நகரில் ஹூனான் மார்க்கெட் அந்த நாட்டின் வைரஸ் ஆராய்ச்சி மையம் அருகே அமைந்திருப்பது தி சண்டே டைம்ஸ் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்வுக்குழு தலைவரும் பழமைவாத கட்சி எம்.பி.யுமான டாம் எதிர்காலத்தில் இதுபோன்ற பேரழிவில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள கொரோனா எங்கே உருவானது என்ற முழுமையான புலனாய்வு அவசியம் என்று வலியுறுத்தி இருக்கிறார். இதேபோல் பிரிட்டன் மற்றும் நார்வே நாட்டு அறிவியலாளர்கள் இணைந்து நடத்திய ஆய்வில் உகான் ஆய்வகத்தில் விஞ்ஞானிகளே கொரோனா வைரஸை உருவாக்கியது கண்டறியப்பட்டதாக லண்டனில் இருந்து வெளியாகும் பிரபல டெய்லி மெயில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸை உருவாக்கிய சீன விஞ்ஞானிகள் வவ்வாலில் இருந்து வைரஸ் உருவானது போல் காட்டுவதற்காக மறு உருவாக்கம் மூலம் தடயங்களை அளித்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. கொரோனா எப்படி உருவானது என்பதை முழுமையாக துப்பறிந்து 90 நாட்களுக்குள் அறிக்கை அளிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அந்நாட்டு புலனாய்வு முகமைகளுக்கு கடந்த வாரம் உத்தரவிட்டுள்ளார். ஆனால் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை மருத்துவரும் சீனா கொரோனா உலகம் முழுவதும் பரவிய கிருமி என்றும் அதனை தங்கள் நாட்டில் தான் கண்டுபிடித்ததாகவும் விளக்கம் அளித்துள்ளது.



Tags : UK , corona
× RELATED பிரான்சில் இருந்து கடல் வழியாக...