×

இஸ்ரேலில் முடிவுக்கு வருகிறதா நெதன்யாகுவின் ஆட்சி?: எதிர்கட்சிகள் இணைந்து புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க முடிவு..!!

இஸ்ரேல்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க முடிவு செய்துள்ளனர். இஸ்ரேலில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை . பிரதமர் நெதன்யாகுவின் லிக்யூட் கட்சிக்கு 30 இடங்கள் மட்டுமே கிடைத்திருந்தது. இந்த நிலையில் அனைத்து கட்சிகளையும் அழைத்து பேசிய அந்நாட்டு அதிபர், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதனை அடுத்து நெதன்யாகு மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார்.. மே 4ம் தேதிக்குள் அவர் தனது பெரும்பான்மையை நிரூபித்து புதிய அரசை அமைக்க வேண்டும் என அதிபர் உத்தரவிட்டார். பல கட்சிகளுடன் நெதன்யாகு பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை புதிய அரசை நெதன்யாகு அமைக்கவில்லை. 


இந்த நிலையில் இஸ்ரேலில் செய்தியாளர்களை சந்தித்த யாமினா கட்சியின் தலைவர்  பென்னர்ட், எதிர்கட்சிகள் இணைந்து புதிய அரசை அமைக்க முடிவு செய்துள்ளதாகவும், வரும் புதன்கிழமைக்குள் அதிபர் புதிய அரசை ஆட்சி அமைக்க அழைப்பார் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 17 எம்.பி.க்களை கொண்ட யாஅடிட் கட்சியின் தலைவர் லேபிட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் பென்னர்ட் தெரிவித்துள்ளார். ஏற்கனவே நெதன்யாகு யாமினா கட்சியின் தலைவர்  பென்னர்ட் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்த நிலையில், அவர் எதிர்கட்சிகளுடன் இணைந்து புதிய அரசை அமைக்க முடிவு செய்துள்ளார். இதன் மூலம் 12 ஆண்டுகாலம் பிரதமராக இருந்து வரும் நெதன்யாகுவின் பதவிக்காலம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 



Tags : Netanyahu ,Israel , Israel, Netanyahu, rule ?, Opposition, Prime Minister
× RELATED இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக வலுக்கும்...