ராதாபுரம் தொகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம்-சபாநாயகர் அப்பாவு, ஞானதிரவியம் எம்பி துவக்கி வைத்தனர்

வள்ளியூர் : ராதாபுரம் தொகுதிக்குட்பட்ட வள்ளியூர், வடக்கன்குளம், பணகுடி, காவல்கிணறு உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முகாமை சபாநாயகர் அப்பாவு, ஞானதிரவியம் எம்பி துவக்கி வைத்தனர்.நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. தொற்று பரவலை தடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் 18 முதல் 45 வயதிற்கு உட்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ராதாபுரம் தொகுதிகுட்பட்ட பகுதிகளான வடக்கன்குளம், பணகுடி, காவல்கிணறு, வள்ளியூர் உள்ளிட்ட இடங்களில் நேற்று கொரோனா தடுப்பூசி முகாமினை சபாநாயகர் அப்பாவு, நெல்லை எம்.பி ஞானதிரவியம் தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு கபசுர குடிநீரை வழங்கினர்.

நிகழ்ச்சியில் ராதாபுரம் வட்டாட்சியர் கனகராஜ், ஒன்றிய செயலாளர்கள் ராதாபுரம் மேற்கு ஜோசப்பெல்சி, வள்ளியூர் தெற்கு விஜயன், பேரூர் செயலாளர் சேதுராமலிங்கம், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் எரிக்ஜூட், பேரூர் திமுக முன்னோடி சிவனுபாண்டியன், திமுக பிரமுகர் மாடசாமி, நம்பி, வடக்கு ஒன்றிய பொறுப்புகுழு உறுப்பினர் சிவராமகிருஷ்ணன், ஆச்சியூர் ராமசாமி, மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் மந்திரம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் முத்துகிருஷ்ணன், பேரூர் துணை செயலாளர் நயினார், வள்ளியூர் கலை இலக்கிய பகுத்தாய்வு அமைப்பாளர் மகேஷ்சிங், துணை அமைப்பாளர் சுரேஷ் பாக்கியம், திமுக தொண்டரணி அமைப்பாளர் பொன்னி சண்முகவேல்,  வர்த்தக அணி அமைப்பாளர் ரவி, முன்னாள் கவுன்சிலர் கிருஷ்ணன், சார்லஸ், பெஸ்கி மற்றும் ஆறுமுகம், லட்சுமணன் உட்பட பலர் பங்கேற்றனர். முகாமில் பல்வேறு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டனர்.

   பாவூர்சத்திரம் : பெத்தநாடார்பட்டி சமுதாய நலக்கூடத்தில் பாவூர்சத்திரம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. மனோஜ்பாண்டியன் எம்எல்ஏ முகாமினை தொடங்கி வைத்தார். இதில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். நிகழ்ச்சியில் ஒன்றிய அதிமுக செயலாளர் இருளப்பன், முன்னாள் ஊராட்சி தலைவர் ராதா, கணபதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கீழப்பாவூர் நாடார் அம்மன் கோயில் மைதானத்தில் இன்று (31ம்தேதி) காலை 10 மணிக்கு நடைபெறும் தடுப்பூசி முகாமினை மனோஜ்பாண்டியன் எம்எல்ஏ தொடங்கி வைக்கிறார். இதில் 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்கள் பங்கேற்று, தடுப்பூசி செலுத்திக் கொள்ளும்படி பேரூர் செயலாளர் ஜெயராமன் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆவுடையானூர்  ஊராட்சி  சின்னநாடானூர் இந்து நடுநிலைப்பள்ளியில் நடந்த தடுப்பூசி முகாமை பழனி நாடார் எம்எல்ஏ தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்  வழங்கினார். நிகழ்ச்சியில் 113  பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதில் தெட்சணமாற நாடார் சங்க தலைவர்  ஆர்.கே.காளிதாசன், பாவூர்சத்திரம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்  ராஜ்குமார்,  வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இசக்கியப்பா, பாவூர்சத்திரம்  வணிகர்கள் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், காங்கிரஸ் மாநில பேச்சாளர்  பால்துரை, செல்லப்பா, பள்ளி நிர்வாகி தனசிங்,  கீழப்பாவூர் வட்டார தலைவர்  சேசு ஜெகன், நகர தலைவர் ஆனந்த், ஊராட்சி செயலாளர் சவுந்தர், ஆவுடையானூர்  கிராம காங்கிரஸ் கமிட்டி குமரேசன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

 வி.கே.புரம்:  அம்பை ஒன்றியம் சிவந்திபுரத்தில் சமுதாயநலக்கூடத்தில் சிவந்திபுரம்  ஊராட்சி, அகஸ்தியர்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. அம்பை தாசில்தார் வெங்கட்ராமன் முகாமை துவக்கிவைத்தார். அகஸ்தியர்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் பிரபுபுல், பிடிஒ மணி முன்னிலை வகித்தனர். முகாமில் 18 வயது முதல் 45 வயதிற்கு உட்பட்ட 200 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதில் ஊராட்சி செயலர் வேலு, கிராம உதவியாளர் அனிஷ், மேஸ்திரி பெல்பின், உதவியாளர் முத்துக்குட்டி, செவிலியர் தமிழரசி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

விகேபுரத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை நகராட்சி ஆணையாளர் காஞ்சனா தொடங்கி வைத்தார். ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை டாக்டர் மணிகண்டன் தலைமை வகித்தார். நகராட்சி சுகாதார ஆய்வாளர் கணேசன் முன்னிலை வகித்தார். முகாமில் மொத்தம் 220 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் தலைமை செவிலியர் ராஜேஸ்வரி, செவிலியர்கள் செல்வராணி, பிரேமா, சிவகாமி, தாயம்மாள், சிதம்பரம் பங்கேற்றனர்.

சுரண்டை: வீராணத்தில் மாவட்ட திமுக சிறுபான்மை பிரிவு சார்பில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தலைமை வகித்து மாவட்ட திமுக சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் வீராணம் சேக் முகமது தொடங்கி வைத்தார். வட்டார சுகாதார மருத்துவர் டாக்டர் குத்தாலராஜ், சுகாதார ஆய்வாளர் ராம்குமார் முன்னிலை வகித்தனர். முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அனைவருக்கும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. கிராம சுகாதார செவிலியர் மேரி, தங்கதுரைச்சி, வீராணம் கிளை செயலாளர் பாலசுப்பிரமணியன், திமுக பிரதிநிதி பாலமுருகன், அமானுல்லா, செய்யது இப்ராகிம், முகமது முஸ்தபா, தமுமுக மாவட்ட ஊடகப்பிரிவு செயலாளர் முத்தலிபு மற்றும்  நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

Related Stories:

More
>