×

நைஜீரியா பள்ளியில் துப்பாக்கி முனையில் 200 குழந்தைகள் கடத்தல்: தீவிர விசாரணையில் நைஜீரியா போலீசார்

அபுஜா: நைஜீரியாவில் பள்ளி கூடத்தில் புகுந்த மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் 200 மாணவர்களை கடத்தி சென்றுள்ளனர். நைஜீரியா நாட்டின் நைஜர் நகரில் தெகினா என்ற பகுதியில் சாலிகு டாங்கோ இஸ்லாமியா என்ற பள்ளி உள்ளது. நேற்று மதியம் திடீரென மோட்டார் சைக்கிள்களில் மர்ம நபர்கள் சிலர் உள்ளே நுழைந்தனர். மேலும் உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்த தொடங்கினார். இந்நிலையில் மர்மநபாத்கள் பள்ளியில் பயின்ற 200 மாணவர்களை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர். 


பள்ளியில் இருந்து எத்தனை மாணவர்கள் கடத்தப்பட்டனர் என உறுதிப்படுத்த வேண்டி உள்ளது என நைஜர் நகர போலீஸ் அதிகாரி கூறினார். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் மர்ம நபர்கள் பள்ளி கூடத்தில் புகுந்து மாணவர்களை கடத்தி செல்வதும், பின்னர் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அரசு விடுவித்து கொண்டு வருவதும் அதிகரித்து உள்ளது. எனவே பள்ளி மாணவர்களை கடத்தியது குறித்து போலீசார் தீவிர வாசரணை நடத்தி வருகின்றனர். 



Tags : Nigeria ,Nigeria police , Nigeria, school, 200 children, abduction
× RELATED ரூ.100 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்