×

அரசியல் செய்வதற்கு எவ்வளவோ விஷயம் உள்ளது ஆய்வுக்கூட்டங்களில் பங்கேற்று எடப்பாடி ஆலோசனை வழங்கலாம்: அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

ஆத்தூர்: சேலம் மாவட்டம், ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு, சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் சொந்த நிதியில், 125 ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் 40 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை வழங்கினார். அதனை மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு அவற்றை வழங்கினார். பின்னர், அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருவதால், தற்போது தொற்றின் தாக்கம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசியல் நடத்த வேண்டியதில்லை. அவர் அரசியல் நடத்த எவ்வளவோ விஷயங்கள் உள்ளன. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எம்பி, எம்எல்ஏக்கள், அதிகாரிகளுடன் நடத்தப்படும் ஆலோசனை கூட்டங்களில் அவர் கலந்து கொண்டு நல்ல ஆலோசனை வழங்கினால், அதனை தயக்கமின்றி செயல்படுத்த தயாராக உள்ளோம். மின்கட்டணம் செலுத்துவதில் குளறுபடிகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்பட்டு, மின்கட்டணம் செலுத்துபவர்களுக்கு முந்தைய கட்டணம் உட்பட 2 வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

அவர்கள் எந்த வாய்ப்பின்படி மின்கட்டணம் செலுத்துகிறார்களோ அதன்படி வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.  கடந்த ஆட்சியாளர்களின் செயல்பாடுகளால், பல துறைகள் சீரழிந்துள்ளன. அவற்றை முற்றிலும் சீர்செய்ய தேவையான நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் எடுத்து வருகிறார். இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

Tags : Minister Sentlephology , There is so much to do with politics Participate in study meetings and give advice to Edappadi: Interview with Minister Senthilpalaji
× RELATED முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்...