கருப்பு பூஞ்சை நோயால் பலியாகும் முன்களப்பணியாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: டிடிவி.தினகரன் கோரிக்கை

சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது: கொரோனாவைத் தொடர்ந்து கருப்பு பூஞ்சை நோய் அச்சுறுத்தி வரும் நிலையில் அதற்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான மருந்தினை மத்திய அரசிடம் இருந்து பெறுவதற்கு தமிழக அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கருப்பு பூஞ்சை நோயினைக் கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டியது அவசியம். கருப்பு பூஞ்சை நோய்க்கு அரசு கூட்டுறவு மருந்தகத்தில் மருந்தாளுநராக பணியாற்றிய பெண் ஒருவர் முதல் பலியாகி இருப்பதால் அம்மா மருந்தகங்கள் மற்றும் கூட்டுறவு மருந்தகங்களில் பணிபுரியும் மருந்தாளுநர்களை முன்களப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்.

இதுமட்டுமின்றி கொரோனாவால் உயிரிழந்த முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடுகளை கொரோனாவின் தொடர்ச்சியாக வரும் கருப்பு பூஞ்சை நொய்க்கு பலியாகும் முன்களப்பணியாளர்களுக்கும் தமிழக அரசு வழங்கிட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories:

More
>