×

தடுப்பூசி தட்டுப்பாட்டை தவிர்க்க மத்திய அரசிடம் கோரியுள்ளதாக மக்கள் நல்வாழ்வு செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை: மக்கள் தொகைக்கு ஏற்ப தடுப்பூசிகளை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யாவிட்டால் தடுப்பூசி செலுத்தும் பணியை 2 நாட்கள் நிறுத்த வேண்டிய சூழல் ஏற்படும் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார். குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் புதியதாக 100 ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளிட்ட 150 படுக்கைகள் வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு வருகிறது.

இதை பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் மற்றும் தமிழக மக்கள் நல்வாழ்வு செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டனர். பிறகு செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர் புதிய கொரோனா சிகிச்சை மையம் நாளை மறுநாள் செயல்பட தொடங்கும் என குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க மக்கள் தொகைக்கு ஏற்ப தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மத்திய அரசிடம் கோரியிருப்பதாக தெரிவித்த அவர் கூடுதலாக தடுப்பூசி வழங்காவிட்டால் தடுப்பூசி செலுத்தும் பணியை 2 நாட்களுக்கு நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்று மத்திய அரசிடம் தெரிவித்திருப்பதாக கூறினார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று 50 விழுக்காடு குறைந்திருப்பதாக தெரிவித்த ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் தொற்று பாதிப்பு குறைந்துள்ளதாக கூறினார்.



Tags : People's ,Wellbeing ,Radakrishnan , vaccine
× RELATED நாடாளுமன்ற தேர்தலுக்கான அம்மா மக்கள்...