×

எனது ஹெட்போனை எங்கு வைத்துள்ளீர்கள்? கோஹ்லியிடம் அனுஷ்கா கேள்வி

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, இன்ஸ்டாகிராமில் நேரலையில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவரின் மனைவி அனுஷ்கா சர்மா குறுக்கே வந்து, வீட்டில் எனது ஹெட்போனை எங்கு வைத்துள்ளீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த கோஹ்லி, படுக்கைக்கு அடுத்த பக்கத்து மேஜையில் என பதில் அளித்தார்.

ஒரு ரசிகர் விராட்டிடம் ஓய்வு நேரத்தில் என்ன செய்வீர்கள் என கேட்டார், அதற்கு அனுஷ்காவுடன் சில நல்ல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நிதானமாக பார்ப்பேன், என்றார். மகள் வாமிகாவின் பொருள் என்ன?, அவளின் படத்தை வெளியிடமுடியுமா என்ற, என்ற கேள்விக்கு, “வாமிகா என்பது துர்கா தேவியின் மற்றொரு பெயர்.

சோஷியல் மீடியா என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்வதற்கும், அவளது விருப்பத்தைத் தேர்வு செய்வதற்கும் முன்பு, எங்கள் குழந்தையை சமூக ஊடகங்களுக்கு வெளிப்படுத்த வேண்டாம் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம், என்றார்.

Tags : Anushka ,Kohli , Where do you put my headphones? Anushka questions Kohli
× RELATED சதம் விளாசினார் கோஹ்லி ஆர்சிபி 183 ரன் குவிப்பு