ஒரே நாளில் 3 பேர் உயிரை பறித்த கருப்பு பூஞ்சை நோய்; திண்டுக்கல்லில் ஒருவர் உயிரிழப்பு

திண்டுக்கல்: கருப்பு பூஞ்சை பாதிப்பால் திண்டுக்கல் மாவட்டம் கருப்பணம்பட்டியில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில், கருப்பு பூஞ்சை பாதிப்பால் உயிரிழந்துள்ளார். ஏற்கனவே நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் தலா ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது ஒருவர் உயிரிழந்துள்ளார். கருப்பு பூஞ்சை நோயால் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,  கருப்பு பூஞ்சை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.  

கடந்த வாரம் கருப்பு பூஞ்சை நோயால் மயிலாடுதுறை, தஞ்சை, கன்னியாகுமரி், வேலூர் மாவட்டத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்களுக்கு அதிக அளவாக கருப்புப் பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. அவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இருப்பினும் இந்த நோய் தொற்றால் பலரும் உயிரிழந்து வருகின்றனர். மேலும் தமிழகத்தில் 8 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு்ளளனர். 

Related Stories:

>