கொரோனாவை தொடர்ந்து உயிரைக்கொள்ளும் கருப்பு பூஞ்சை நோய்; நெல்லை மாவட்டத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பால் மேலும் ஒரு பெண்  உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அந்த பெண்ணுக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண்ணுக்கு வயது 40  என்பது குறிப்பிடத்தக்கது.  கடந்த வாரம் கருப்பு பூஞ்சை நோயால் மயிலாடுதுறை மற்றும் வேலூரைச் சேர்நவர்கள் உயிரிழந்துள்ளனர். 

மியூகோர்மைகோசிஸ் எனும் கருப்புப் பூஞ்சை மிகவும் அபாயகரமான, அரியவகை பூஞ்சை.நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்களுக்கு அதிக அளவாக கருப்புப் பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. அவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இருப்பினும் இந்த நோய் தொற்றால் பலரும் உயிரிழந்து வருகின்றனர்.

Related Stories: