×

கொரோனா நோய் தொற்று: அதிகம் பாதிப்புள்ள கோவை உள்பட 3 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

கோவை: கொரோனா கட்டுப்படுத்துவது குறித்து கோவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் கோவை முதலிடத்தில் தொடரும் நிலையில் ஆய்வு செய்ய உள்ளார். ஏற்கனவே மே 20ல் கோவை சென்று கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொண்டார். கோவைக்கு அடுத்தபடியாக திருப்பூர், ஈரோடு, சேலம், மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா நோய் தொற்றின் பாதிப்பு நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. 


இதைத்தொடர்ந்து கோவை உள்பட 6 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கா.ராமச்சந்திரன், அர.சக்கரபாணி ஆகியோர் முகாமிட்டு ஆய்வு செய்து வருகிறார்கள். பல இடங்களில் கொரோனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் தமிழக அரசின் முதன்மை செயலாளர் சித்திக், கோவை மாவட்டத்துக்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு, கொரோனா தடுப்பு பணிகளை முடுக்கிவிட்டு நேரடியாக ஆய்வு செய்து வருகிறார். 



Tags : Corona Infestation ,Minister of ,India ,Coe. Q. ,Stalin , Corona, Coimbatore, 3 District Collector, MK Stalin
× RELATED திறன் மேம்பாடு குறித்து சிங்கப்பூர்...