×

கோவிட் தொற்று அறிகுறி உள்ள நபர்களுக்கு நேரடியாக சிடி ஸ்கேன் எடுப்பதை தடுக்க அலுவலர்கள் நியமனம்: மாநகராட்சி ஆணையர் உத்தரவு

சென்னை: சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள சிடி ஸ்கேன் மையங்களில் கோவிட் தொற்று அறிகுறி உள்ள நபர்கள் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளாமல் நேரடியாக மார்பக ஸ்கேன் எடுப்பதாக தகவல்கள் பெறப்படுகிறன்றன. எனவே, சென்னையில் உள்ள 40 சிடி ஸ்கேன் மையங்களில் மார்பக ஸ்கேன் எடுக்கும் நபர்களின் பெயர், தொலைபேசி மற்றும் முகவரி ஆகிய தகவல்களை gccpvtctscanreports@chennaicorporation.gov.in  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டு இதனை கண்காணிக்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 60 வயதிற்கு மேற்பட்ட தொற்று பாதித்த நபர்களுக்கு முதற்கட்ட பரிசோதனை மையங்களுக்கு அழைத்து சென்று எக்ஸ்ரே போன்ற பரிசோதனை செய்யப்பட்டது. தற்பொழுது 45 வயதிற்கு மேற்பட்டவர்களையும்சோதனை மையங்களுக்கு அழைத்து சென்று ற பரிசோதனை மேற்கொள்ள   வேண்டும்.

Tags : Appointment of officers to prevent direct CT scan of persons with symptoms of Govt infection: Corporation Commissioner's order
× RELATED மெட்ரோ ரயில் பணிக்கு ஒன்றிய அரசு நிதி...