வக்பு இடத்தை விற்க முயற்சி முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீல் மீது புகார்: முதல்வருக்கு முன்னாள் வக்பு வாரிய தலைவர் கடிதம்

சென்னை: தமிழ்நாடு வக்பு வாரிய முன்னாள் தலைவர் செ.ஹைதர் அலி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியதாவது: தமிழ்நாடு வக்பு வாரியத்தில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகளுக்கு காரணமானவர்கள் குறித்து தங்களது மேலான கவனத்திற்கு கொண்டு வர விழைகிறேன். முன்னாள் வக்பு வாரிய அமைச்சர் நிலோபர் கபில் மீது அவரது உதவியாளரே புகார் கொடுத்திருப்பது தாங்கள் அறிந்ததே. அவருடைய ஊழல்கள் கணக்கிலடங்காதது. குறிப்பாக வக்பு வாரியத்தில் வாரிய தலைவர் இல்லாத தருணத்திலும், தலைவரின் வருகைக்குப் பிறகும் அவருடைய எண்ணப்படியே அனைத்தும் நடைபெற்றது. நிலோபர் கபீலுடைய தூதுவராக பெண் வழக்கறஞர் ஒருவர் செயல்பட்டார்.

தேர்தல் அறிவிப்பு வருவதற்கு சில மணிகளுக்கு முன்பாகவே அதிராம்பட்டிணம் எம்.கே.என். மத்ரஷா மற்றும் அறக்கட்டளை வக்புவின் நிர்வாகிகளை அறிவித்துள்ளார். அமைச்சருக்கு வேண்டப்பட்டவர்களுக்கு கூட்டு முயற்சியில் வக்பு இடத்தை தாரை வார்க்கும் முயற்சியும் நடைபெற்றுள்ளது. ஆகவே,அவர் இருந்த காலங்களில் நடைபெற்ற முறைகேடுகளை முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: