×

ஆம்னி பேருந்துகளுக்கான 2ம் காலாண்டு வரி தள்ளுபடி செய்ய கோரிக்கை

சென்னை: ஆம்னி பேருந்துகளுக்கு 2வது காலாண்டு (ஏப்ரல், மே, ஜூன்) சாலைவரியை தள்ளுபடி செய்ய வேண்டும் என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக அச்சங்கத்தின் தலைவர் அன்பழகன், தமிழக முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா ஊரடங்கு தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 90 சதவிகித ஆம்னி பேருந்துகள் கடந்த 1 வருடமாக இயங்காமல் உள்ளது. இந்நிலையில் கடந்த 10.4.2021 முதல் மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது உள்ள முழு ஊரடங்கால், 100 சதவீதம் ஆம்னி பேருந்துகள் முற்றிலும் இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
   
ஆகையால் தமிழ்நாடு உரிமம் பெற்ற ஆம்னி பேருந்துகளுக்கு வரும் 2வது காலாண்டு (ஏப்ரல், மே, ஜூன்) சாலைவரியை தள்ளுபடி செய்ய வேண்டும். அடுத்து 3வது காலாண்டு (ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர்) சாலை வரியை 50 சதவீதம் வசூலித்து உதவி செய்ய வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


Tags : Omni buses , Request for 2nd quarter tax deduction for Omni buses
× RELATED குப்பை கிடங்காக மாறிய கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: பயணிகள் கடும் அவதி