புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மீது முன்னாள் மாணவிகள் குற்றச்சாட்டு: விளக்கம் கேட்டு தாளாளருக்கு முதன்மை கல்வி அலுவலர் கடிதம்

சென்னை: செனாய்நகர், புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன்  மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மீது முன்னாள் மாணவிகள் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்கு பள்ளி நிர்வாகம் எடுத்த நடவடிக்கை என்ன என்று விளக்கம் கேட்டு பள்ளி தாளாளருக்கு முதன்மை கல்வி அலுவலர்  சார்பில் கடிதம் அனுப்பியுள்ளனர். இது குறித்து  அவர் அனுப்பிய கடிதத்தில்: செனாய்நகர் புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் மீது அப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவிகள் தெரிவித்துள்ள பாலியல் குற்றச்சாட்டு குறித்து  தீவிர விசாரணை மேற்கொள்ளும் பொருட்டு பள்ளியின் தாளாளர், முதல்வர் மற்றும் சம்மந்தப்பட்ட ஆசிரியர் தமிழ்நாடு குழந்தை  உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் நேரில் ஆஜராக தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவிகள் தெரிவித்துள்ள பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியர் பெயர் மற்றும் அவர் மீது பள்ளி நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கை விவரம் மற்றும் அவ்வாசிரியர் மீது இதற்கு முன்பு மாணவிகளிடமிருந்து புகார் ஏதும் பெறப்பட்டு பள்ளி நிர்வாகத்தால் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது  ஏதேனும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா? என்று விவரத்தினை இச்செயல்முறை கிடைக்கப்பெற்ற அன்றே இவ்வலுவலகம் சமர்பித்திட பள்ளி தாளாளர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

Related Stories:

>