தமிழக காவல்துறையில் 12 போலீஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: திருவள்ளூர் எஸ்பியாக வருண்குமார் நியமனம்

சென்னை: தமிழக காவல்துறையில் 12 போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 3 ஐஜிக்களுக்கு ஏடிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்ட எஸ்பியாக வருண்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு:

பெயர்            பழைய பதவி                புதிய பதவி

கரன்சின்கா            மதுவிலக்கு டிஜிபி                தீயணைப்புத்துறை இயக்குநர்

ஏ.கே.விஸ்வநாதன்        கமாண்டோ படை ஏடிஜிபி            காவலர் வீட்டு வசதி வாரிய நிர்வாக இயக்குநர்

ஆபாஷ் குமார்        பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபி        சிவில் சப்ளை சிஐடி ஏடிஜிபி

சீமா அகர்வால்        தலைமையிட ஏடிஜிபி                சீருடைப்பணியாளர் தேர்வாணைய ஏடிஜிபி

சந்தீப் ராய் ரத்தோர்        சீருடைப்பணியாளர் தேர்வாணைய ஏடிஜிபி        மதுவிலக்குப் பிரிவு ஏடிஜிபி

வன்னியபெருமாள்        கடலோர காவல்படை ஏடிஜிபி            பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு ஏடிஜிபி

சைலேஷ்குமார் யாதவ்    சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு ஏடிஜிபி    காவலர் நலன் ஏடிஜிபி

சந்தீப் மிட்டல்        விரிவாக்கப் பிரிவு ஐஜி            கடலோர காவல்படை ஏடிஜிபி

சங்கர்            வடக்கு மண்டல ஐஜி                தலைமையிட ஏடிஜிபி

அமல்ராஜ்            மேற்கு மண்டல ஐஜி                கமாண்டோ படை ஏடிஜிபி

ஜெயராம்            சீருடைப்பணியாளர் தேர்வாணைய ஐஜி        சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு ஏடிஜிபி

வருண்குமார்        கணினி மயமாக்கல் எஸ்பி            திருவள்ளூர் மாவட்ட எஸ்பி

இவர்களில் சங்கர், அமல்ராஜ், ஜெயராம் ஆகியோருக்கு ஐஜியில் இருந்து ஏடிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>