×

மண்ணை கவ்விய மான்செஸ்டர் சிட்டி: சாம்பியனை வீழ்த்திய பிரைட்டன்

பிரைட்டன்: இங்கிலீஷ் பிரிமீயர் லீக் தொடரில் சாம்பியனாகிவிட்ட மான்செஸ்டர் சிட்டியை மண்ணை கவ்வ வைத்த,  பிரைட்டன் எச்ஏ அணி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.இங்கிலீஷ் பிரிமீயர் லீக் போட்டியின் நடப்புத் தொடரில் சாம்பியன் பட்டத்தை மான்செஸ்டர் சிட்டி கைப்பற்றியுள்ளது. இன்னும் ஆட்டங்கள் எஞ்சிருந்தாலும்  36 ஆட்டங்களில் விளையாடி 83 புள்ளிகளுடன் மற்ற  அணிகள் நெருங்க முடியாத இடத்தில் மான்செஸ்டர் சிட்டி உள்ளது.இந்நிலையில் பிரைட்டன் நகரில் நேற்று நடந்த 37வது ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் மான்செஸ்டர் சிட்டியை,  17வது இடத்தில் இருந்த பிரைட்டன் எச்ஏ எதிர்கொண்டது. வலுவான  மான்செஸ்டர் சிட்டிதான் வெற்றி ெபறும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கு ஏற்ப ஆட்டம் தொடங்கிய 2வது நிமிடத்திலேயே  அந்த அணியின்  இல்கால் முதல் கோல் அடித்ததார்.  ஆட்டம் முழுவதும் மான்செஸ்டர்தான்  ஆதிக்கம் செலுத்தியது.   மான்செஸ்டர் அணியின் ஜாவோ கான்சலோ முரட்டு தனத்தை வெளிப்படுத்தியதால் சிவப்பு அட்டை காட்டி ஆட்டத்தில் இருந்த வெளியேற்றப்பட்டார்.  அதனால் 10 பேருடன் விளையாடிய மான்செஸ்டர் முதல் பாதியில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. தொடர்ந்து 2வது பாதியிலும்  மான்செஸ்டரின்  பில் ஃபோடன் 48வது நிமிடத்தில்  ஒரு கோல் அடித்தார். அதனால் மான்ெசஸ்டர் வெற்றி வாய்ப்பு அதிகரித்தது. ஆனால் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தினாலும் அதன் பிறகு கோல் மழை ெபாழிந்தது பிரைட்டன் தான். அந்த அணியின்  லியாண்ரோ 50 நிமிடத்திலும், ஆடம் 72வது நிமிடத்திலும்,  டான் பர்ன் 76 நிமிடத்திலும் கோல் அடித்து  அசத்தினர். அதன் பிறகு மான்செஸ்டர் மேற்ெகாண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. அதனால்  பிரைட்டன்  3-2 என் கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. சாம்பியன் பட்டம் உறுதியான பிறகு மான்செஸ்டர் சிட்டி 2வது முறையாக மண்ணை கவ்வியுள்ளது.  அதன் 36வது ஆட்டத்தில் செல்சீ அணியிடம் ஏற்கனவே தோற்றது. இந்த அசத்தல் வெற்றியின் மூலம்  பிரைட்டன் 17வது இடத்தில் இருந்து15வது இடத்துக்கு முன்னேறியது….

The post மண்ணை கவ்விய மான்செஸ்டர் சிட்டி: சாம்பியனை வீழ்த்திய பிரைட்டன் appeared first on Dinakaran.

Tags : Manchester City ,Brighton ,Brighton HA ,English Premiere League ,Dinakaran ,
× RELATED ஐரோப்பிய சாம்பியன் லீக் முதல்முறையாக பைனலில் மான்செஸ்டர் சிட்டி