×

மாநில அரசுக்கு கொரோனா சிகிச்சைக்கான ரெம்டெசிவிர் மருந்து விநியோகம் நிறுத்தம்

டெல்லி: மாநில அரசுக்கு கொரோனா சிகிச்சைக்கான ரெம்டெசிவிர் மருந்து விநியோகத்தை மத்திய அரசு நிறுத்தி கொண்டுள்ளது. சந்தைகளில் தற்போது ரெம்டெசிவிர் மருந்து அதிக அளவில் கிடைப்பதாலும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து தேவையும் குறைந்துவிட்டதாலும் அவற்றை மாநில அரசுகளுக்கு வழங்குவது நிறுத்திக்கொள்ளப்பட்டுவிட்டதாக மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

தற்போது ரெம்டெசிவிர் மருந்து தேவையை விட உற்பத்தி அதிகரித்து விட்டதாகவும் அவர் விளக்கினார். கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி ஒருநாளைக்கு 33,000 மருந்து குப்பிகள் உற்பத்தி செய்யப்பட்டதாகவும் தற்போது அது ஒருநாளைக்கு 3 லட்சத்து 50 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும் ரெம்டெசிவிர் உற்பத்தியாளர்கள் எண்ணிக்கை 20 லிருந்து 60 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். ரெம்டெசிவிர் மருந்திற்காக தமிழகத்தில் 2 வாரங்களுக்கு முன் ஏராளமானோர் அலைமோதியதும் அது கள்ளச்சந்தையில் பலமடங்கு விற்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.



Tags : remdesivir, corona
× RELATED காந்தி நகரில் போட்டியிடும் அமித்...