ஆந்திராவில் தனியார் மருத்துவமனைகள் தொடங்க முன்வந்தால் 5 ஏக்கர் நிலம் இலவசம்!: முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு..!!

ஹைதராபாத்: ஆந்திராவில் தனியார் மருத்துவமனைகள் தொடங்குபவர்களுக்கு 5 ஏக்கர் நிலம் இலவசமாக வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். தனியாரை ஊக்குவிக்கவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விஜயவாடாவில் முதல்வரின் முகாம் அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் கொரோனா தொற்று பரவல் தொடர்பாக ஜெகன்மோகன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது ஆந்திர பிரதேச பிரிவினை ஏற்பட்ட பிறகு ஆந்திர மாநிலத்திற்கு சிறந்த மருத்துவமனைகள் அமையாமல் போனது பற்றி ஜெகன்மோகன்ரெட்டி குறிப்பிட்டார். எனவே ஆந்திர மாநிலத்தில் உள்ள 13 மாவட்ட தலைநகரிலும், 3 மாநகராட்சிகளாக திருப்பதி, விஜயவாடா, ராஜமகேந்திரவரம் ஆகிய 3 இடங்கள் என மொத்தம் 16 இடங்களில் ஒவ்வொரு இடத்திலும் 30 முதல் 50 ஏக்கர் நிலம் மருத்துவமனைகள் அமைய ஒதுக்கீடு செய்யப்படும் என்றார். 

மேலும் ஆந்திரா முழுவதும் 16 அரசு மருத்துவக் கல்லூரிகளுடன் கூடிய மருத்துவமனைகள் தொடங்கப்பட உள்ளதாக ஜெகன்மோகன் ரெட்டி கூறினார். இதனால் மருத்துவ சிகிச்சைக்காக ஆந்திர மக்கள் சென்னை, ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படாது என்று அவர் உறுதியளித்தார். இதுகுறித்து ஜெகன்மோகன் ரெட்டி ஆலோசனை கூட்டத்தில் பேசியதாவது, 13 மாவட்டங்கள், 3 மாநகராட்சிகளான திருப்பதி, விஜயவாடா, ராஜமகேந்திரவரம் என 16 இடங்களில் மருத்துவமனைகள் அமைக்கப்படும். 30 முதல் 50 ஏக்கர் நிலம் இலவசமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இங்கு உயர்ரக சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும். 5 ஏக்கர் நிலம் 6 பேருக்கும், 10 பேர் முன்வந்தால் 50 ஏக்கர் நிலம் பிரித்து கொடுக்கப்படும் என்றார். 

Related Stories: